வோடபோன் பயனரா நீங்கள்? புதிய 100 ஜிபி 4ஜி டேட்டா பேக் பற்றி தெரியுமா?

By: Dhivagar
3 October 2020, 2:39 pm
Vi introduces a new data pack with 100GB of 4G data
Quick Share

அண்மையில் வோடபோன் மற்றும் ஐடியாவை இணைத்து தனது பிராண்ட் பெயரை Vi என தொலைதொடர்பு நிறுவனம் மாற்றிக்கொண்டது. இப்போது இந்த பிராண்ட்  இந்தியாவில் ஒரு புதிய ப்ரீபெய்டு  டேட்டா  பேக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்தப் புதிய ப்ரீபெய்டு திட்டத்தில் 100 ஜிபி டேட்டாவை 56 நாட்களுக்கு ரூ.351 விலையில் தினசரி வரம்பில்லாமல் நிறுவனம் வழங்குகிறது, அதாவது ஒவ்வொரு நாளும் இவ்வளவுதான் பயன்படுத்த வேண்டும் என்ற வரம்பில்லாமல் இந்த டேட்டா பேக்கைப் பயன்படுத்தலாம்.

Vi பிராண்டிலிருந்து கிடைக்கும் இந்த புதிய டேட்டா பேக் மாணவர்கள், வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள், கிரிக்கெட் பிரியர்கள், மற்றும் கேமிங் ஆர்வலர்களுக்கு இந்த புதிய மலிவு  விலையிலான டேட்டா திட்டம் ஒரு  வரமாக வந்துள்ளது.

ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா

Vi அதன் வாடிக்கையாளர்களை தங்களிடம் தக்கவைத்துக் கொள்வதற்காக பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்திய சலுகையாக, நிறுவனம் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி 4ஜி டேட்டாவை 7 நாட்களுக்கு இலவசமாக வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

வோடபோன் பயன்பாட்டின் மூலம் உங்கள் தரவு இருப்பை நீங்கள் சரிபார்க்கலாம், மேலும் இது குறித்து ஒரு அறிவிப்பு வந்துவிட்டதா என உங்கள் இன்பாக்ஸையும் சரிபார்க்கலாம், ஏனெனில் பயனர் எப்போது அதைப் பெறுவார் என்பதற்கான காலக்கெடு எதுவும் இல்லை. மேலும், இந்த சலுகை யார் யாருக்கு எந்தெந்த நேரத்தில் கிடைக்கும் என்பது குறித்து  Vi அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.

Views: - 50

0

0