ரூ.128 ப்ரீபெய்டு வவுச்சரை அறிமுகம் செய்தது Vi | ஆனால் நமக்கு இல்லை!

Author: Dhivagar
29 June 2021, 4:40 pm
Vi Launches Rs. 128 Prepaid Voucher; Offering 10 Minutes For On-Net Calling
Quick Share

Vi (வோடபோன்-ஐடியா) தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய ப்ரீபெய்டு பேக்கை அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.128 விலையிலான ப்ரீபெய்டு பிளான் வவுச்சர் குறிப்பாக அழைப்பு நன்மைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சிக்கல் உள்ளது. என்னவென்றால், இந்த திட்டம் ஒரு சில வட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் Vi அறிவித்துள்ளது.

ரூ.128 ப்ரீபெய்டு வவுச்சர்: விவரங்கள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ப்ரீபெய்டு திட்டம் அதன் நெட்வொர்க்கில் அழைப்பதற்கு 10 நிமிடங்கள் வரை இலவசமாக வழங்குகிறது, அதே நேரத்தில் மற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கு வினாடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கிறது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையில் இலவச அழைப்பு வசதியுடன் கிடைக்கும் இரவு சலுகைகள் இதிலும் கிடைக்கும் மற்றும் உள்ளூர், STD மற்றும் ISD SMS சேவையை முறையே ரூ.1, ரூ.1.5, ரூ.5 கட்டணம் செலுத்திடுவதன் மூலம் 28 நாட்களுக்கு பெற முடியும்.

தற்போது, ​​இந்த திட்டம் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் (கிழக்கு), உத்தரபிரதேசம் (மேற்கு) மற்றும் இமாச்சல பிரதேசத்தில் கிடைக்கிறது. ஏர்டெல் ரூ.128 விலையில் அழைப்பு மற்றும் தரவு நன்மைகள் இல்லாமல் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ததை அடித்து இப்போது இந்த திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.128 திட்டத்தை SIM கார்டு செயலிழக்கமால் இருக்க அறிமுகம் செய்தது. வோடபோன் அதனுடன் சில நன்மைகளை மட்டும் வழங்குகிறது. தங்கள் மொபைல் எண்களை செயலில் வைத்திருக்க விரும்பும் பயனர்கள் அழைப்புகளை மட்டும் பெற இந்த திட்டம் உதவும்.

தவிர ரூ.128 திட்டத்தை தவிர இதே பிரிவில் Vi நிறுவனம் ரூ.46 திட்டத்தையும் வழங்குகிறது. ரூ.46 திட்டம் அதன் நெட்வொர்க்கில் அழைப்பதற்கு 10 நிமிடங்களையும், இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையிலான சேவையையும் 28 நாட்களுக்கு  வழங்குகிறது.

எதுக்கு???

ஆனால், ரூ.79 திட்டம் 128 ரூபாய்க்கான டாக்டைம் உடன் கிடைக்கும்போது இப்படி ஒரு திட்டத்தை நிறுவனங்கள் ஏன் அறிமுகம் செய்ய வேண்டும்  என பயனர்கள் குழப்பத்திலேயே உள்ளனர்.

Views: - 344

0

0