டேட்டா ரோல்ஓவர் வசதியுடன் Vi ரீசார்ஜ் திட்டம்! ஜியோ, ஏர்டெல் கூட இதை பண்ணல!
1 December 2020, 2:21 pmவோடாபோன் ஐடியாவின் புதிய பிராண்ட் அடையாளமான Vi மீண்டும் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதன் சந்தாதாரர்களுக்கு நிறைய நன்மை பயக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. சமீபத்திய நடவடிக்கையில், டெல்கோ ஒரு புதிய ‘வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்’ (Weekend Data Rollover) திட்டத்துடன் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.1,197 விலையிலான இந்த ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு பல நன்மைகளைத் தருகிறது.
ரூ. 1,197 ப்ரீபெய்ட் திட்டம்
Vi வழங்கும் ரூ.1,197 ப்ரீபெய்ட் திட்டம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் நீண்ட கால திட்டமாகும். இந்த ப்ரீபெய்ட் திட்டம் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற வசதிகளுடன் வருகிறது.
வார இறுதியில் டேட்டா ரோல்ஓவர் வசதி
மேற்சொன்ன நன்மைகளுடன் கூடுதலாக வோடபோன் வழங்கும் இந்த 1,197 ப்ரீபெய்ட் திட்டம் ‘வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்’ வசதியையும் கொண்டுள்ளது. அதாவது, வார நாட்களில் இருந்து பயன்படுத்தப்படாத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தலாம். இதனால் சந்தாதாரர்கள் வார இறுதி நாட்களில் தங்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும்.
இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், Vi ரூ.1,197 ப்ரீபெய்ட் திட்டம் Vi மூவிஸ் & டிவி பயன்பாட்டிற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது. நீங்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்த ஆர்வமாக இருந்தால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது மொபைல் பயன்பாடு வழியாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
0
0