ரூ.267 திட்டம் அறிமுகம்! இப்படி ஒரு திட்டம் இல்லமாலே இருக்கலாம் | Vi மீது பயனர்கள் அதிருப்தி

Author: Dhivagar
1 July 2021, 4:07 pm
Vi Rs 267 prepaid plan launched, offering 25GB data
Quick Share

வோடபோன் ஐடியா (Vi) தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.267 விலையில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டம் தினசரி டேட்டா லிமிட் இல்லாமல் கிடைக்கிறது, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தைப் போலவே இதிலும் தினசரி டேட்டா லிமிட் இல்லை.

புதிய ரூ.267 விலையிலான ப்ரீபெய்ட் திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும், மேலும் இது 25 ஜிபி 4ஜி டேட்டாவை தினசரி வரம்பில்லாமல் வழங்குகிறது. எனவே மொத்த தரவையும் ஒரே நேரத்தில் அல்லது திட்டத்தின் வேலிடிட்டி காலத்திற்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டேட்டா தவிர, இந்த புதிய திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதலாக, இந்த திட்டத்துடன் Vi மூவிஸ் மற்றும் டிவி கிளாசிக் உள்ளடக்கம் ஆகியவையும் கிடைக்கும்.

ஆனால் வோடாபோனில் தினசரி வரம்புடன் கூடிய ரூ.149 திட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த திட்டாமல் தேவையில்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ரூ.149 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது. இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பில்லா டேட்டா சேவையையும் வழங்குகிறது. 

இப்போது அறிமுகம் செய்துள்ள ரூ.267 திட்டம் மொத்தமே 25 டேட்டா மட்டுமே வழங்குகிறது ஆனால், ரூ.149 திட்டமோ மொத்தம் 56 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஒப்பிடுகையில், குறைந்த விலையிலான இந்த திட்டமே சிறந்த ஒன்றாக தோன்றுகிறது. 

வோடபோன் ஐடியா சமீபத்தில் ரூ.447 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர் ரூ.267 ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் ஐடியாவின் ரூ.447 திட்டம் 60 நாட்கள் செல்லுபடியாகும், மேலும் இது தினசரி வரம்பில்லாமல் மொத்தம் 50 ஜிபி டேட்டா வழங்குகிறது. தரவைத் தவிர, இது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், திரைப்படங்கள், அசல் உள்ளடக்கம், லைவ் டிவி மற்றும் பலவற்றை வழங்கும் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கு இலவச அணுகலை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ முதன்முதலில் தினசரி வரம்பு இல்லாத திட்டத்தை கொண்டு வந்தது, அதையடுத்து அதே வழித்தடத்தைப் பின்பற்றி பல திட்டங்களை ஏர்டெல் மற்றும் Vi அறிமுகம் செய்து வருகின்றன. 

Views: - 250

0

0