ப்ரீபெய்டு திட்டங்களுடன் வழங்கும் டபுள் டேட்டா நன்மைகளை நிறுத்தியது வோடபோன் ஐடியா! பயனர்கள் பெரும் அதிர்ச்சி!

By: Dhivagar
10 September 2021, 3:09 pm
Vi Stops Providing Double Data Benefits With Three Prepaid Plan
Quick Share

வோடபோன் ஐடியா தனது சந்தாதாரர்களைத் தக்கவைத்துக்கொள்ள போராடிவரும் இந்த சமயத்தில், ப்ரீபெய்டு திட்டங்களுடன் வழங்கும் நன்மைகளைக் குறைக்கத் தொடங்கியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனம் இரண்டு வட்டங்களில் டபுள் டேட்டா நன்மைகளை வழங்குவதை நிறுத்தியுள்ளது. குறிப்பாக, ப்ரீபெய்டு திட்டங்களுடன் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டாவை வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு ஆபரேட்டர் வோடபோன்-ஐடியா மட்டுமே ஆகும்.

ஆனால், இந்த நன்மைகளை ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளன, அதாவது இந்த இரண்டு வட்டங்களில் உள்ள பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா கிடைக்காது. இருப்பினும், மற்ற வட்டங்களில் உள்ளவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து 4 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம்.

உங்களுக்கு தெரியவில்லை என்றால், வோடபோன்-ஐடியா ரூ.299, ரூ.499, மற்றும் ரூ.699 திட்டங்களுடன் டபுள் தரவு நன்மைகளை வழங்கி வந்தது. இப்போது செய்யப்பட்டுள்ள இந்த திருத்தத்தை அடுத்து, ​​ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டங்களில் உள்ள பயனர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை மட்டுமே பெறுவார்கள். இருப்பினும், நீங்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வழங்கும் பேக்குகளைத் தேடுகிறீர்களானால், இவை உங்களுக்கானது அல்ல.

வோடபோன்-ஐடியாவின் 3 ஜிபி டேட்டா பேக்குகள்

நிறுவனம் மூன்று திட்டங்களுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவை வழங்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த திட்டங்களின் விலைகள் முறையே ரூ.501, ரூ.701 மற்றும் ரூ.901 ஆகும். இதில் ரூ.501 திட்டம் என்பது புதிதாக தொடங்கப்பட்ட திட்டம் ஆகும், இது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகலை வழங்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, Vi மூவிஸ் & டிவி, ஒரு நாளைக்கு 100 செய்திகள் மற்றும் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு சேவை ஆகியவற்றை வழங்குகிறது.

அடுத்து ரூ.701 திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல் ஆகியவற்றை வழங்குகிறது. ரூ.901 விலையிலான மூன்றாவது திட்டம் அதிக விலை கொண்டது, இந்த திட்டத்துடன் பயனர்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி, ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள், 16 ஜிபி கூடுதல் டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வார இறுதி டேட்டா ரோல்ஓவர் நன்மைகள் மற்றும் பிங்க் ஆல்-நைட் நன்மை போன்ற சலுகைகள் இதனுடன் கிடைக்கும்.

Views: - 254

0

0

Leave a Reply