விவோ V20, V20 SE, Y51A, Y30 ஸ்மார்ட்போன்களை வாங்க செம்ம ஆஃபர்!
22 January 2021, 9:49 amஇந்தியாவில் குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு விவோ தனது V20 சீரிஸ் மற்றும் Y சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்குச் சிறப்பு சலுகைகளை வியாழக்கிழமை அறிவித்தது. இந்த பட்டியலில் விவோ V20, விவோ V20 SE, விவோ Y51A மற்றும் விவோ Y30 ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இந்த சலுகைகள் நிறுவனத்தின் பிரதான மற்றும் ஆன்லைன் கடைகளில் கிடைக்கின்றன.
விவோவின் மெயின்லைன் கடைகளில் கிடைக்கும் சலுகைகளைப் பொறுத்தவரை, நிறுவனம் எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000 வரை கேஷ்பேக் வழங்குகிறது.
பஜாஜ் ஃபைனான்ஸிலிருந்து ஜீரோ டவுன் பேமென்ட், ஹோம் கிரெடிட், பூஜ்ஜிய வட்டி EMI திட்டம் ஆகியவையும் HDB, IDFC ஃபர்ஸ்ட் வங்கி, டி.வி.எஸ் கிரெடிட், எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றிலிருந்து ஜீரோ டவுன் பேமென்ட், ஜீரோ வட்டி EMI திட்டம் ஆகியவற்றை வழங்குகிறது.
கடைகளைப் பொறுத்தவரை, விவோ தனது இ-ஸ்டோரில் இருந்து வாங்கும்போது 72 வது கொள்முதலுக்கு 72% கேஷ்பேக்கை வழங்குகிறது. X, V, U, Z சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது நிறுவனம் ரூ.3,000 கேஷ்பேக்கையும் வழங்குகிறது. மொபைல் ப்ரீபெய்ட் ஆர்டர்களுடன் இலவச ப்ளூடூத் ஸ்பீக்கர்களுடன் 12 மாதங்கள் வட்டியில்லாத EMI வசதி கிடைக்கும். கூடுதலாக, இது விவோ X50 மற்றும் விவோ V19 ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச மொபைல் கேஸ்கள் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையைப் பொறுத்தவரை,
- விவோ V20 இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாடு, ரூ.24,990 விலையில் கிடைக்கும்.
- அதே நேரத்தில் சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.27,990 விலையில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ், சன்செட் மெலடி மற்றும் மூன்லைட் சொனாட்டா வண்ண வகைகளில் கிடைக்கும்.
- விவோ V20 SEயின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி பதிப்பு கிராவிட்டி பிளாக் மற்றும் அக்வாமரைன் கிரீன் கலர் வகைகளில் ரூ.20,990 விலையில் கிடைக்கும்
- Y-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வருகையில், விவோ Y51A வின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாடு டைட்டானியம் சபையர் மற்றும் கிரிஸ்டல் சிம்பொனி வண்ண வகைகளில ரூ.19,99,00 விலையில் கிடைக்கும்.
- விவோ Y30 இன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட், இந்தியாவில் ரூ.14,990 விலையில் கிடைக்கும்.
0
0