இந்தியாவில் விவோ V20 ப்ரோ முன்பதிவுகள் ஆரம்பம் | எதிர்பார்க்கப்படும் விலை, விவரக்குறிப்புகள் இங்கே

22 November 2020, 3:18 pm
Vivo V20 Pro Available For Pre-Booking In India
Quick Share

விவோ இந்தியாவில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிறுவனம் டிசம்பர் மாதம் V20 புரோ 5 ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சாதனம் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. முந்தைய அறிக்கைகள் இந்த சாதனம் ரூ.30,000 விலைக்கொண்டிருக்கும் என்று தெரிவித்திருந்தன. சாதனத்தின் சரியான விலை அறிமுகத்திற்கு முன்னதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் வதந்திகள் சரியானவை தான் என்று தெரிகிறது. மேலும், ஸ்மார்ட்போன் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக உள்ளது. விவரங்கள் பின்வருமாறு:

விவோ V20 ப்ரோ 5 ஜி முன் பதிவுகள் 

91Mobiles வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, விவோ V20 ப்ரோ இந்தியாவில் ரூ.29,990 விலையைக் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும், முன்கூட்டிய ஆர்டர்களுக்காகவும் கைபேசி கிடைக்கிறது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. சாதனத்தை ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாகவும் முன்பதிவு செய்யலாம்.

நிறுவனம் அதன் ஆன்லைன் முன் பதிவு குறித்த விவரங்களை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், ஆஃப்லைன் முன்பதிவுகளின் போது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா கார்டுகள், EMI சலுகைகள் மற்றும் ஜியோ சலுகைகள் ஆகியவற்றில் 10 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.

விவோ V20 ப்ரோ முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் விவோ V20 ப்ரோ சர்வதேச மாறுபாடாக ஒரே மாதிரியான வன்பொருளுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ​​குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G செயலியுடன் இந்த சாதனம் வெளியாகக்கூடும். இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளியாகும்.

இந்த ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இதன் முன்பக்க பேனல் ஒரு FHD+ தெளிவுத்திறனை ஆதரிக்கும் மற்றும் ஒரு ஐபோன் X போன்ற நாட்ச் பகுதியில் இரட்டை செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கும். சாதனம் பின் பேனலில் மூன்று கேமராக்களை கொண்டிருக்கும்.

இந்த அமைப்பில் 64MP முதன்மை சென்சார், 8MP அகல-கோண சென்சார் மற்றும் 2MP லென்ஸ் இருக்கும். செல்ஃபிகளுக்கு 44MP முதன்மை சென்சார் மற்றும் 8MP அகல-கோண சென்சார் இருக்கும். இந்த சாதனம் ஆன்ட்ராய்டு 11 OS இல் இயங்கும். கூடுதலாக, இது 33W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,000 mAh பேட்டரியையும் கொண்டிருக்கும்.

Views: - 31

0

0