அறிமுகத்திற்கு முன்னதாக விவோ V20 ப்ரோ போனின் விலை விவரங்கள் கசிந்தது

30 November 2020, 3:43 pm
Vivo V20 Pro price leaked ahead of launch on December 2
Quick Share

விவோ V20 ப்ரோ டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, விவோ V20 ப்ரோ போனின் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது.

இந்தியாவின் பல சில்லறை விற்பனையாளர்களின் பட்டியல் மூலம், விலை தெரியவந்துள்ளது. விவோ V20 ப்ரோ 8/128 ஜிபி மெமரி விருப்பத்திற்கு ரூ.29,990 விலைக்கொண்டு இருக்கும்.

MySmartPrice அறிக்கையின்படி, இந்த பட்டியல் ரிலையன்ஸ் டிஜிட்டல், சங்கீதமொபைல்ஸ் மற்றும் பூர்விகாமொபைல்ஸ் ஆகியவற்றில் காணப்பட்டுள்ளது. தொலைபேசியின் விலை ரூ.29,999 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட முந்தைய அறிக்கையுடன் விலை கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது.

இந்த விலைப்பிரிவில், விவோ V20 ப்ரோ ஒன்பிளஸ் நோர்டுடன் போட்டியிடும், இது தற்போது ரூ.24,999 என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. நினைவுகூர, விவோ V20 புரோ 5ஜி ஏற்கனவே தாய்லாந்தில் 14,999 தாய் பாட்ஸ் (தோராயமாக ரூ.35,132) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி வண்ண விருப்பங்களில் வருகிறது.

ஸ்மார்ட்போன் நாடு முழுவதும் முன்பதிவு செய்ய கிடைக்கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, மற்றும் ஜெஸ்ட் ஆகியவற்றில் 10 சதவீத கேஷ்பேக் கிடைக்கும். மேலும், ஒருவர் குறைந்த கட்டணத்தில் 20 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம், ரூ.10,000 வரை மதிப்புள்ள ஜியோ சலுகைகள், விவோ மேம்படுத்தல் சலுகைகள் மற்றும் IDFC ஃபர்ஸ்ட் வங்கியிலிருந்து 1 EMI கேஷ்பேக் ஆகியவற்றைப் பெறலாம்.

விவோ V20 ப்ரோ விவரக்குறிப்புகள்

விவோ V20 ப்ரோ 5 ஜி 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இது ஃபண்டச் OS 10.5 உடன் ஆண்ட்ராய்டு 10 ஐ இயக்குகிறது மற்றும் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இது 6.44 அங்குல முழு HD+ அமோலெட் டிஸ்ப்ளேவுடன் 1080 x 2400 பிக்சல்கள் திரைதெளிவுத்திறன் கொண்டது, 20: 9 விகிதமும் HDR 10 ஆதரவும் கொண்டது.

Views: - 0

0

0