விவோ V20 SE ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைந்தது | புதிய விலை & விவரங்கள்

24 February 2021, 3:41 pm
Vivo V20 SE price slashed in India
Quick Share

விவோ இப்போது இந்தியாவில் தனது விவோ V20 SE ஸ்மார்ட்போனின் விலையை ரூ.1,000 குறைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவில் ரூ.20,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது ரூ.1,000 விலைக் குறைப்புக்குப் பிறகு, விவோ V20 SE ரூ.19,990 விலையில் விற்பனை செய்யபடுகிறது. அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் ஸ்மார்ட்போன் அதன் அசல் விளையான ரூ.20,990 விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருவதால், விலைக் குறைப்பு ஆஃப்லைன் சந்தையில் மட்டுமே பொருந்தும் என்று தெரிகிறது.

இந்த விலைக் குறைப்பை முதலில் மும்பையைச் சேர்ந்த மொபைல் போன் விற்பனையாளர் ஆன மகேஷ் டெலிகாம் தெரிவித்தது. சில்லறை விற்பனையாளர் தனது சமூக ஊடக தளங்கள் (பேஸ்புக் மற்றும் ட்விட்டர்) வழியாக இந்த விலைக் குறைப்பு குறித்த  தகவல்களை வெளியிட்டது.

விவோ V20 SE 6.80 இன்ச் முழு HD+ அமோலேட் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 20: 9 திரை விகிதத்தைக் கொண்டுள்ளது. தொலைபேசியில் ஸ்னாப்டிராகன் 665 செயலி மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டாரேஜ் உள்ளது.

விவோ V20 SE 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, 32 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.

தொலைபேசியின் பேட்டரி திறன் 4000 mAh உடனே 33W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்களில் இரட்டை 4 ஜி VoLTE, வைஃபை 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் வி 5, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும். 

Views: - 6

0

0