5ஜி வசதியுடன் புதிய விவோ V21 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

29 April 2021, 1:39 pm
Vivo V21 5G launched in India with Dimensity 800U, 44MP front camera with OIS
Quick Share

விவோ பிராண்ட் இன்று தனது விவோ V21 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் V21 தொடரில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகம் ஆகியுள்ள விவோ V21 5ஜி ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 800U SoC, டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது.

விவோ V21 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ.29,990 விலையும் மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டிற்கு ரூ.31,990 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி மே 6 முதல் பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோரில் விற்பனைக்கு வரும். 

முன்பதிவு இன்று (ஏப்ரல் 29) முதல் தொடங்குகிறது. இது ஆர்க்டிக் ஒயிட், சன்செட் டாஸ்ல் மற்றும் டஸ்க் ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கும்.

விவோ V21 5 ஜி விவரக்குறிப்புகள்

விவோ V21 5ஜி ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் முழு HD+ AMOLED திரை 1080 x 2404 பிக்சல்கள் ரெசல்யூஷன், 800 நைட்ஸ் பிரகாசம், HDR 10+, 90 Hz refresh rate போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. தொலைபேசியில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

உட்புறத்தில், விவோ V21 5ஜி மீடியாடெக் டைமன்சிட்டி 800U சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, அதோடு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. பிரத்யேக மைக்ரோ SD கார்டு ஸ்லாட் மூலம் விரிவாக்கத்திற்கான ஆதரவும் உள்ளது.

பின்புறத்தில், விவோ V21 5ஜி ஒரு டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது 64 மெகாபிக்சல் பிரதான சென்சார், OIS, 8 மெகாபிக்சல் செகண்டரி வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், OIS ஐ ஆதரிக்கும் 44MP சென்சார் மற்றும் இரட்டை LED ஃபிளாஷ் அமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.

பேட்டரியைப் பொறுத்தவரை, விவோ V21 5ஜி 4,000 mAh பேட்டரி உடன் ஆற்றல் பெறுகிறது. இது 33W FlashCharge வசதியுடன் வேகமான சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது, இது 30 நிமிடங்களில் 63% வரை சார்ஜ் செய்ய முடியும். இது ஆண்ட்ராய்டு 11 இல் ஃபன்டச் OS 11.1 உடன் இயங்குகிறது.

விவோ V21 5ஜி போனின் இணைப்பு விருப்பங்களில் 5ஜி, 4ஜி LTE, வைஃபை, புளூடூத் v5.1, GPS / A-GPS மற்றும் யூ.எஸ்.பி டைப்-c போர்ட் போன்ற அம்சங்கள் அடங்கும்.

Views: - 86

0

0

Leave a Reply