நிஜமாகும் கனவு: உங்கள் போனின் பேனல் வண்ணம் மாறிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்?! (வீடியோ உள்ளே)
4 September 2020, 5:17 pmவிவோ ஒரு புதிய தொலைபேசியில் செயல்படுவதாக கூறப்படுகிறது, இது ஒரு பொத்தானை அழுத்தினால் அதன் பின்புற பேனலின் நிறத்தை மாற்றிக்கொள்ளுமாம். நிறுவனம் வியாழக்கிழமை வெய்போவில் அது போன்ற ஒரு தொலைபேசியின் டீஸர் வீடியோவை வெளியிட்டது, இது வண்ணத்தை மாற்றும் தந்திரத்தை உருவாக்க எலக்ட்ரோக்ரோமிக் கண்ணாடியைப் பயன்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. 48-வினாடி வீடியோ பின்புறத்தில் ஒரு செவ்வக கேமரா போன்ற ஒன்றை கொண்டுள்ளது, ஆனால் உண்மையான வடிவமைப்பு பொது பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.
அசல் வெய்போ இடுகையின் படி, இந்த அம்சம் தொலைபேசியின் பேட்டரி செயல்திறனை எந்தவொரு குறிப்பிடத்தக்க அளவிலும் பாதிக்காது என்று விவோ கூறுகிறது. நிறுவனம் தொழில்நுட்பம் அல்லது தயாரிப்பு பற்றிய கூடுதலாக எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை, ஆனால் தொழில்நுட்பத்தைப் பற்றி நமக்குத் தெரிந்தவற்றிலிருந்து, எலக்ட்ரோக்ரோமிக் கண்ணாடி அதன் நிறத்தை மாற்ற மின்னழுத்த மாற்றங்களை பயன்படுத்துகிறது. எனவே, இதன் மூலம் தான் இந்த நுட்பம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், விவோவின் புதிய ஸ்மார்ட்போனின் விஷயத்தில், என்ன மாதிரியான நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் கூடுதல் விவரங்களைப் பெறுவோம் என்று நம்புகிறோம்.
எலக்ட்ரோக்ரோமிக் கண்ணாடி என்பது ‘எலக்ட்ரோக்ரோமிசம்’ electrochromism எனும் நுட்பத்தைப் பயன்படுத்தி தெளிவான ஒளிபுகாநிலைக்குச் செல்லலாம் மற்றும் பல நிறங்களையும் மாற்றலாம். எலக்ட்ரோக்ரோமிசம் என்பது பொருட்களின் மீது மின்னழுத்தத்தைப் பாயச் செய்கையில் நிறம் மற்றும் ஒளிபுகாநிலையை மாற்றும்.
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மிகவும் குறிப்பிடத்தக்க ஸ்மார்ட்போன்களில் ஒன்று விவோவின் சகோதர பிராண்டான ஒன்பிளஸின் ஒன்பிளஸ் கான்செப்ட் ஒன் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் CES 2020 தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனம், கேமரா பயன்பாட்டில் இல்லாதபோது கேமராவை மறைக்க எலக்ட்ரோக்ரோமிக் கண்ணாடியைப் பயன்படுத்தி ‘கண்ணுக்கு தெரியாத கேமரா’ வை கொண்டிருப்பதாக தெரிவித்தது.
0
0