விவோ X50, விவோ V19 ஸ்மார்ட்போன்களின் விலைகள் திடீர் குறைப்பு! இப்போ விலை எவ்ளோ தெரியுமா?

2 February 2021, 1:05 pm
Vivo X50, V19 price slashed by up to Rs 5,000
Quick Share

விவோ X50 மற்றும் V19 ஸ்மார்ட்போன்களின் விலையை முறையே ரூ .5,000 மற்றும் ரூ.3,000 வரை குறைத்துள்ளது. புதிய விலைகள் பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.

விவோ X50 இப்போது 

  • 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ.29,990 விலையுடனும், 
  • 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்டிற்கு ரூ.32,990 விலையுடனும் கிடைக்கிறது. 

நினைவுகூர, விவோ X50 முன்பு 

  • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பகத்திற்கு ரூ.34,990 விலையுடனும், 
  • 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலுக்கு ரூ.37,990 விலையுடனும் கிடைத்தது.

ரூ.3,000 விலைக் குறைப்புக்குப் பிறகு, விவோ v19 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் இப்போது ரூ.21,990 விலையில் கிடைக்கிறது, இதன் முந்தைய விலை ரூ.24,990 ஆக இருந்தது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.27,990 ஆக இருந்தது இப்போது ரூ.24,990 விலையில் கிடைக்கிறது.

புதிய விலைக் குறைப்பு தற்போது ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வழங்கப்படுகிறது என்று mysmartprice தெரிவித்துள்ளது. தள்ளுபடி விலை amazon.in மற்றும் பிளிப்கார்ட்டில் இன்னும் பிரதிபலிக்கவில்லை.

Views: - 0

0

0