ஜெய்ஸ் ஆப்டிக்ஸ் உடன் விவோ X60t அறிமுகம்: விலை & விவரங்கள் இதோ

4 April 2021, 9:18 am
Vivo X60t with Zeiss optics launched: Check price, specifications
Quick Share

விவோ தனது X தொடரின் கீழ் ​​விவோ X60t என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த கைபேசி தற்போது சீனாவில் 3,498 யுவான் (சுமார் ரூ.39,000) விலையில் கிடைக்கிறது. Gizmochina தளத்தில் வெளியான தகவலின்படி, புதிதாக அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அமைதியாக ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

V2085A என்ற மாடல் எண் கொண்ட ஸ்மார்ட்போன் 6.56 அங்குல முழு HD+ மையப்படுத்தப்பட்ட பஞ்ச் ஹோல் AMOLED டிஸ்ப்ளேவை 19.8:9 என்ற விகிதத்துடன் கொண்டுள்ளது. விவோ X60t ஒரு டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை உள்ளடக்கியது – OIS உடன் 48 MP முதன்மை சென்சார், 2x டெலிஃபோட்டோ லென்ஸுடன் 13 MP சென்சார் மற்றும் 120 டிகிரி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 13 MP சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த அமைப்பின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், அவை ஜெய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் தானாகவே சரிப்படுத்தும் அம்சங்களைக் கொண்டுள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, முன் பஞ்ச் துளையில் 32 MP சென்சார் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் எக்ஸினோஸ் 1080 SoC க்கு பதிலாக மீடியா டெக் டைமன்சிட்டி 1100 SoC ஆல் இயக்கப்படுகிறது மற்றும் இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட Origin OS உடன் இயங்குகிறது மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,300 mAh பேட்டரி உடன் ஆதரிக்கப்படுகிறது.

இணைப்பு முன்னணியில், கைபேசி இரட்டை சிம், 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.2, NFC ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது ஒரு முடுக்கமானி, சுற்றுப்புற ஒளி சென்சார், திசைகாட்டி, கைரோஸ்கோப் மற்றும் வண்ண வெப்பநிலை சென்சார் போன்ற அனைத்து அத்தியாவசிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இருப்பினும், ஸ்மார்ட்போனில் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் மைக்ரோ SD கார்டு ஸ்லாட் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சீனாவுக்கு வெளியே விவோ X60t கிடைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

Views: - 0

0

0

Leave a Reply