விவோ X70 ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்காக காத்திருப்பவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!

3 June 2021, 4:38 pm
Vivo X70 series to be launched in India in September
Quick Share

சமீபத்தில் அறிமுகமான X60 தொடரின் அடுத்த பதிப்பாக, சீன தொழில்நுட்ப நிறுவனமான விவோ, X70 தொடர் ஸ்மார்ட்போன்களின் உருவாக்க பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

சமீபத்திய தகவலின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.

இந்நிறுவனம் X70 தொடரின் அறிமுகத்திற்காக இந்தியன் பிரீமியர் லீக்குடன் உடன் கூட்டு சேர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விவோ X70 பற்றிய விவரங்கள் இப்போது குறைவாக இருந்தாலும், கைபேசியில் மெலிதான பெசல்களுடன் பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு மற்றும் தரவு பாதுகாப்புக்கென பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்புறத்தில், இது ஒரு குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கக்கூடும்.

இந்த சாதனம் 6.56 அங்குல முழு-HD+ (1080×2376 பிக்சல்கள்) AMOLED திரையை 398ppi பிக்சல் அடர்த்தியுடன் கொண்டிருக்கும்.

விவோ X70 ஒரு குவாட் ரியர் கேமரா ஏற்பாட்டை வழங்குவதாக ஊகிக்கப்படுகிறது, இதில் 48 MP பிரதான சென்சார், 8 MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 5 MP மேக்ரோ கேமரா மற்றும் 13 MP கேமரா ஆகியவை இருக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில், 32 MP செல்பி கேமரா இருக்கும்.

விவோ X70 ஒரு ஸ்னாப்டிராகன் 888 செயலியில் இருந்து ஆற்றல் பெரும் என்றும்  தகவல் கசிந்துள்ளது, அதனுடன் 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ROM இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

உட்புறத்தில், இது ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும், மேலும் 4,500 mAh பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவுடன் கொண்டிருக்கும்.

இணைப்பிற்காக, கைபேசி வைஃபை 6, புளூடூத் 5.1, GPS, NFC, 5ஜி மற்றும் டைப்-C போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவையும் கொண்டிருக்கக்கூடும்.

விவோ X70 தொடரின் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் வெளியீட்டு நேரத்தில் அறிவிக்கப்படும், இது செப்டம்பரில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்பார்க்கப்பட்ட விவரக்குறிப்புகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், வெண்ணிலா X70 மாடலுக்கு சுமார் ரூ.46,000 விலை நிர்ணயம் செய்யப்படும் என்று ஊகிக்கப்படுகிறது.

Views: - 128

0

0

Leave a Reply