ஸ்னாப்டிராகன் 439, 5000 mAh பேட்டரி உடன் விவோ Y12A ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை & விவரங்கள் இதோ

21 June 2021, 1:32 pm
Vivo Y12A announced with Snapdragon 439, 5000mAh battery, 13MP dual cameras and more
Quick Share

விவோ நிறுவனம் தாய்லாந்தில் விவோ Y12A ஸ்மார்டபோனை  அறிமுகம் செய்துள்ளது. இந்த தொலைபேசி கடந்த மாதம் வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்ட Y12s 2021 இன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பதிப்பாகும்.

விவோ Y12A ஒரே ஒரு 3 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு THB 4,4990 (தோராயமாக ரூ.11,800) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நீலம் மற்றும் பச்சை வண்ண விருப்பங்களில் வருகிறது.

Y-சீரிஸ் பிரிவில் சேரும் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச், 5000 mAh பேட்டரி, 6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, 13 MP இரட்டை கேமராக்கள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது.

விவோ Y12A விவரக்குறிப்புகள்

விவோ Y12A 6.51 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே 720 x 1600 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 20:9 திரை விகிதத்தைக் கொண்டது. பாதுகாப்பிற்காக, சாதனம் ஒரு பக்கத்தில் கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆக்டா கோர் 1.95GHz ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் மற்றும் 3 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது. மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக ஸ்டோரேஜை 256 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

விவோ Y12A ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி உடன் இயக்கப்படுகிறது, இது 10W சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. HD மூவி பிளேபேக்கின் போது 16.3 மணி நேரம் வரை பேட்டரி நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான ஃபண்டச் OS 11 உடன் தொலைபேசி இயங்குகிறது.

தொலைபேசியின் இரட்டை பின்புற செவ்வக கேமரா அமைப்பு 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார்களை கொண்டது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.

இணைப்பு விருப்பங்களில் இரட்டை 4ஜி VoLTE, 2.4 GHz வைஃபை, புளூடூத் 5.0, GPS, மைக்ரோ USB 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும்.

Views: - 143

0

0