ரூ.10,000 க்கும் குறைவான விலையில் விவோ Y12s இந்தியாவில் அறிமுகம்!

12 January 2021, 6:11 pm
Vivo Y12s launched in India
Quick Share

விவோ செவ்வாய்க்கிழமை (12 ஜனவரி) இந்தியாவில் புதிய கைபேசியை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. விவோ Y12s என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. பட்ஜெட் பிரிவை நோக்கமாகக் கொண்ட, விவோவின் புதிய தொலைபேசி ரூ.9,990 விலையில் கிடைக்கிறது.

விவோ Y12s பாண்டம் பிளாக் மற்றும் கிளேசியர் ப்ளூ என இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. விவோ இந்தியா இ-ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம், டாடாக்ளிக் மற்றும் அனைத்து விவோவின் கூட்டாளர் சில்லறை கடைகளிலும் தொலைபேசியை வாங்கலாம்.

விவோ Y12s விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 164.41 × 76.32 × 8.41 மிமீ அளவையும், 191 கிராம் எடையும் கொண்டது. இது HD+ திரை தெளிவுத்திறனுடன் 6.51 இன்ச் LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மென்பொருள் முன்னணியில், இது ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன் டச் OS 11 இல் இயங்குகிறது.

விவோ Y12s மீடியாடெக் ஹீலியோ P35 செயலியில் இயங்குகிறது, அதோடு 3 ஜிபி ரேம் உள்ளது. தொலைபேசி 32 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்துடன் வருகிறது. 5,000 mAh பேட்டரி தொலைபேசியை இயக்குகிறது. இது 10W சார்ஜரையும் கொண்டுள்ளது.

புகைப்பட பிரிவில், விவோ Y12s போனில் 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார்கள் உடன் இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளன. முன்பக்கத்தில், இது 8 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.

தொலைபேசியின் பிற அம்சங்களில் மைக்ரோ USB, புளூடூத் 5.0 மற்றும் GPS ஆகியவை அடங்கும்.

Views: - 6

0

0