Vivo Y31 | 5000 mAh பேட்டரியுடன் விவோ Y31 ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை & சலுகை விவரங்கள்

21 January 2021, 12:06 pm
Vivo Y31 Launched In India With 5000mAh Battery
Quick Share

விவோ இந்தியா தனது போர்ட்ஃபோலியோவில் விவோ Y31 என்ற மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் ஆன்லைனில் அதன் முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்திய சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் EIS (எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) அம்சத்துடன் உடன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

விவோ Y20A, விவோ Y51A, விவோ Y12s மற்றும் விவோ Y20G ஆகியவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்போது இந்தியாவில் விவோ Y31 வெளியீடும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், நிறுவனம் ஸ்னாப்டிராகன் 480 SoC மற்றும் 5G இணைப்புக்கான ஆதரவுடன் Y31s போனை சீனாவிலும் அறிமுகம் செய்துள்ளது.

விவோ Y31 இந்திய விலை 

விவோ Y31 இந்தியாவில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸுடன் ஒரே ஒரு சேமிப்பக உள்ளமைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை இந்தியாவில் 16,490 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் ரேசிங் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ கலர் விருப்பங்களில் வருகிறது, மேலும் பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மற்றும் விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும். மேலும், இது இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாக கிடைக்கும்.

வெளியீட்டு சலுகைகள் என்று வரும்போது, ​​விவோ Y31 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளைத் தேர்ந்தெடுக்கும்போது 1,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். IDFC ஃபர்ஸ்ட் வங்கி, ஹோம் கிரெடிட், பஜாஜ் பின்சர்வ், HDB ஃபைனான்ஸ் சேவைகள், ஐசிஐசிஐ வங்கி மற்றும் TVS கிரெடிட் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் ஜீரோ டவுன் பேமெண்ட் திட்டங்கள் கிடைக்கும்.

விவோ Y31 விவரக்குறிப்புகள்

  • விவோ Y31 6.58 அங்குல FHD+ IPS டிஸ்ப்ளே 2408 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டது. 
  • அதன் ஹூட்டின் கீழ், சாதனம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 662 SoC ஐ 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உடன் இணைக்கிறது.
  • கேமரா பிரிவில், எஃப் / 1.79 துளை கொண்ட 48 MP முதன்மை சென்சார், எஃப் / 2.4 துளை கொண்ட 2 MP இரண்டாம் நிலை பொக்கே சென்சார் மற்றும் EIS மற்றும் சூப்பர் நைட் பயன்முறை ஆதரவுடன் அதே துளை கொண்ட 2 MP மூன்றாம் நிலை சென்சார் உள்ளது. 
  • முன்பக்கத்தில், எஃப் / 2.0 துளை கொண்ட 16 MP செல்பி கேமரா சென்சார் உள்ளது.
  • விவோ Y31 இன் இணைப்பு அம்சங்களில் – 4 ஜி LTE, வைஃபை, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-C போர்ட், GPS / A-GPS, மற்றும் FM ரேடியோ, சென்சார்கள், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
  • இதனுடன், 5000 mAh பேட்டரி ஆகியவை 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது.

Views: - 0

0

0