கொரோனா தொற்றுநோய் காரணமாக சரியும் வோடபோன் ஐடியா | முதல் காலாண்டு வருவாயில் பெரும் வீழ்ச்சி

7 August 2020, 7:40 am
The company, India's third-largest telecom operator by subscribers reported its eighth consecutive quarterly loss of 254.6 billion rupees, compared with a loss of 48.74 billion rupees a year earlier
Quick Share

வோடபோன் ஐடியா லிமிடெட் வியாழக்கிழமை அதன் முதல் காலாண்டு வருவாயில் 5.4% சரிவைக் கண்டது. ஏனெனில் நாடு தழுவிய ஊரடங்கினால் அதன் வணிகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனம் பல சந்தாதாரர்களையும் இழந்துள்ளது.

பிரிட்டனின் வோடபோன் குழுமத்திற்கும் பில்லியனர் குமார் மங்கலம் பிர்லாவின் ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டு நிறுவனமாக இயங்கும் இந்த வோடபோன் ஐடியா நிறுவனம் காலாண்டு வருவாயில் மிகப்பெரிய இழப்பைப் பதிவுசெய்துள்ளது. மேலும், இது அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்காக 194.41 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவின் உயர் நீதிமன்றம் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 920 பில்லியன் ரூபாயை வட்டியுடன் செலுத்துமாறு உத்தரவிட்டது.

“இது ஒரு சவாலான காலாண்டாகும், ஏனெனில் கடைகள் மூடப்பட்டிருப்பதால் ரீசார்ஜ்கள் எளிதில் கிடைப்பது சவாலாகியுள்ளது மற்றும் பொருளாதார மந்தநிலையின் காரணமாக வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்கான திறன்களும் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தர் தக்கர் கூறினார்.

வோடபோன் ஐடியாவின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை நான்காம் காலாண்டில் 291.1 மில்லியன் பயனர்களாயிருந்து 279.8 மில்லியன் பயனர்களாக குறைந்துள்ளது. முந்தைய காலாண்டில் ஒரு பயனரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருவாய் 121 ரூபாயிலிருந்து 114 ரூபாயாக குறைந்துள்ளது.

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டரான இந்நிறுவனம் தொடர்ச்சியாக எட்டாவது காலாண்டு இழப்பாக 254.6 பில்லியன் ரூபாயை இழப்பைச் சந்தித்துள்ளது. இதுவே, ஒரு வருடத்திற்கு முன்பு இழப்பு என்பது 48.74 பில்லியன் ரூபாயாக மட்டுமே இருந்தது.

வோடபோன் ஐடியாவின் செயல்பாடுகளின் ஒருங்கிணைந்த வருவாய் இந்த காலாண்டில் 106.59 பில்லியன் ரூபாய் சரிந்தது, இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு 112.70 பில்லியன் ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: “உன்னை நம்பி வந்ததுக்கு….” என்று புலம்பும் ஜியோ வடிக்கையாளர்கள் | நம்பவைத்து ஏமாற்றுகிறதா ஜியோ?(Opens in a new browser tab)

Views: - 10

0

0