வோல்டாஸ் இன்வெர்ட்டர் AC, ஃப்ரிட்ஜ்கள் மற்றும் வாட்டர் கூலர்ஸ் எல்லாம் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கு!

3 March 2021, 6:12 pm
Voltas launches new inverter ACs, refrigerators and water coolers in India
Quick Share

வோல்டாஸ் புதன்கிழமை இந்தியாவில் புதிய இன்வெர்ட்டர் ஏர் கண்டிஷனர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. நிறுவனம் இன்று இந்தியாவில் வோல்டாஸ் மஹா-அட்ஜஸ்டபிள் இன்வெர்ட்டர் AC க்களை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவில் 0.75 டன், 1 டன், 1.2 டன், 1.5 டன் மற்றும் 2 டன் வகைகளில் கிடைக்கிறது. நிறுவனம் இந்த ஏசியின் மொத்தம் 24 யூனிட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தவிர, வோல்டாஸ் 95 யூனிட் இன்வெர்ட்டர் AC, 20 ஸ்ப்ளிட் AC, 20 விண்டோ AC மற்றும் கேஸட் மற்றும் டவர் AC க்களையும் அறிமுகம் செய்துள்ளது. 

கூடுதலாக, நிறுவனம் இன்று தனது 2021 திட்டத்தின் ஒரு பகுதியாக, தனிநபர், விண்டோ, டவர் மற்றும் டெஸர்ட் ஏர் கூலர்கள் போன்ற பல்வேறு துணை பிரிவுகளின் கீழ் தனது வோல்டாஸ் ஃப்ரெஷ் ஏர் கூலர்களின் 48 SKU க்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த புதிய வரம்பில் விண்ட்சர் 4 பக்க குளிரூட்டும் வசதியுடன், ஸ்டைல் மற்றும் அல்ட்ரா கூலிங் கொண்ட எபிகூல், திடமான உலோக உடலமைப்புடன் விராட் மற்றும் ஆல்பா ஃப்ரெஷ் மாடல்களைக் கொண்டுள்ளது.

வோல்டாஸின் தயாரிப்பு வெளியீடுகளின் நீண்ட பட்டியல் அதோடு முடிவடையவில்லை. மாற்றக்கூடிய ஃப்ரீசர், ஃப்ரீசர் ஆன் தி வீல் மற்றும் கர்வ்டு கிளாஸ் ஃப்ரீசர் உள்ளிட்ட 60 யூனிட் வணிக குளிர்பதன தயாரிப்புகளையும் வோல்டாஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. அதோடு, நிறுவனம் 22 யூனிட் வாட்டர் டிஸ்பென்சர்களையும், 25 யூனிட் வாட்டர் கூலர்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு, வோல்டாஸ் B2B பிரிவுக்கான பல குளிர் அறை தீர்வுகளையும் அறிமுகப்படுத்துகிறது.

வோல்டாஸ் தனது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகளின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையை இதுவரை அறிவிக்கவில்லை, ஆனால் வாடிக்கையாளர்களுக்கு வாழ்நாள் இன்வெர்ட்டர் கம்ப்ரெஸ்ஸர் உத்தரவாதமும், ஐந்தாண்டு விரிவான உத்தரவாதமும், கிரெடிட் கார்டுகள் மூலம் கவர்ச்சிகரமான EMI  க்களும், NBFC மூலம் பைனான்ஸ் வசதிகளும் கிடைக்கும்.

Views: - 1

0

0