வோல்வோ எலக்ட்ரிக் XC40 எஸ்யூவி காருக்கான உற்பத்தி குறித்த விவரங்கள் வெளியானது!

Author: Dhivagar
2 October 2020, 5:45 pm
Volvo begins production of electric XC40 SUV
Quick Share

வோல்வோ நிறுவனம் மின்சார வாகனத்தை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. வோல்வோ XC40 கார் ஆனது நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமாக இருக்கப்போகிறது என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.  சீனாவின் ஜீலிக்கு சொந்தமான ஸ்வீடிஷ் கார் தயாரிப்பாளர் இப்போது அதிகாரப்பூர்வமாக இந்த காருக்கான உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

இப்போது பரபரப்பாக மின்சார வாகனங்கள் பிரிவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டியில் இறங்கியுள்ளன. இவ்வேளையில், வோல்வோ இந்தப் பிரிவில் ஆதிக்கம் செலுத்த XC40 மின்சார வாகனம் பெரிய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பல முன்னணி கார் தயாரிப்பாளர்களும் டெஸ்லாவுடன் போட்டியிட பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வோல்வோ XC40 78 கிலோவாட் பேட்டரியைக் கொண்டிருக்கும், இது 400 கிலோமீட்டர் வரம்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் XC40 சுமார் 4.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை அடையும் என்றும் 180 கிமீ அதிவேக வரம்பைக் கொண்டிருக்கும் என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

பெல்ஜியம் பகுதியில் உள்ள வோல்வோ ஆலையில் XC40 மின்சார வாகனத்தின் எத்தனை யூனிட்டுகள் தயாரிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், கார் தயாரிப்பாளர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் தனக்கென ஒரு பிரத்தியேக இடத்தைப் பிடிக்க உறுதியாக உள்ளது.

இந்த காரின் விலை சுமார் $55,000 ஆக இருக்கலாம் என்று ஊகங்கள் தெரிவிக்கின்றன. டெஸ்லாவை விட விலை அடிப்படையில் பெரிய வித்தியாசம்  எதுவும் இல்லை. ஆனால் வோல்வோ பாதுகாப்பு மற்றும் வசதி அம்சங்களை சிறப்பாக கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Views: - 48

0

0