வாட்ஸ்அப்பில் மறையும் மெசேஜ்கள் அம்சம்….. உங்களுக்கு தெரியாத முக்கியமான தகவல்கள்
23 November 2020, 8:35 amவாட்ஸ்அப்பில் மறையும் மெசேஜ்கள் (disappearing messages) அம்சத்தை இயக்குவதன் மூலம் மறையும் மெசேஜ்களை அனுப்பலாம். இந்த அம்சம் இயக்கப்பட்டதும், தனிப்பட்ட அல்லது குழு அரட்டைகளில் அனுப்பப்படும் புதிய மெசேஜ்கள் ஏழு நாட்களுக்குப் பிறகு தானாகவே மறைந்துவிடும்.
இந்த அமைப்பு நீங்கள் முன்பு அனுப்பிய அல்லது பெற்ற மெசேஜ்களைப் பாதிக்காது. தனிப்பட்ட அரட்டையில், பயனர்கள் மறையும் மெசேஜ்களை இயக்கலாம் அல்லது முடக்கலாம். குழு அரட்டையில், குரூப் அட்மின்கள் மட்டுமே மறையும் மெசேஜ்களை இயக்கலாம் அல்லது முடக்கலாம்.
ஒரு பயனர் அந்த ஏழு நாள் காலத்தில் வாட்ஸ்அப்பைத் திறக்கவில்லை என்றால், மெசேஜ் தானாகவே மறைந்துவிடும். இருப்பினும், வாட்ஸ்அப் திறக்கும் வரை மெசேஜின் முன்னோட்டம் அறிவிப்புகளில் காட்டப்படும்.
நீங்கள் ஒரு மெசேஜ்க்கு பதிலளிக்கும்போது, ஆரம்ப மெசேஜ் மேற்கோள் (Quote) இடப்பட்டிருந்தால், ஆரம்ப மெசேஜ் மறைந்தாலும் மேற்கோள் காட்டப்பட்ட உரை ஏழு நாட்களுக்குப் பிறகும் அரட்டையில் இருக்கக்கூடும்.
ஃபார்வேர்டு செய்யப்படும் ஒரு மெசேஜ் உடன் மறையும் மெசேஜ்கள் அம்சம் இயக்கப்படாமல் அனுப்பப்பட்டால், அனுப்பப்பட்ட அரட்டையில் மெசேஜ் மறையாமல் இருக்கும்.
ஒரு மெசேஜ் மறைவதற்கு முன்பு ஒரு பயனர் காப்புப்பிரதியை (Backup) எடுத்து வைத்திருந்தால், மறைந்துபோகும் மெசேஜ் காப்புப்பிரதியில் சேர்க்கப்படும். ஒரு பயனர் காப்புப்பிரதியிலிருந்து மீட்டமைக்கும்போது மறைந்த மெசேஜ்கள் நீக்கப்படும்.
ஒரு வேளை உங்களுக்கு அந்த மெசேஜ்களை மீண்டும் பார்க்க வேண்டுமென்றால்:
- ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்ளலாம்
- நகல் எடுத்து வேறு இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
- வேறொரு சாதனத்தில் போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
மறைந்து போகும் மெசேஜ்களில் இருக்கும் வீடியோக்களும் போட்டோக்களும் உங்களுக்கு அவசியம் என்றால் அதை பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளலாம். இல்லையொயென்றால் Auto Download விருப்பத்தை இயக்கி தானாகவே டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
0
0
1 thought on “வாட்ஸ்அப்பில் மறையும் மெசேஜ்கள் அம்சம்….. உங்களுக்கு தெரியாத முக்கியமான தகவல்கள்”
Comments are closed.