மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்றால் என்ன? இது எப்படி இயங்குகிறது?

5 April 2021, 3:06 pm
What is EVM How does it work in India
Quick Share

நாளை (ஏப்ரல் 6, 2021) தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது. கேரளா, மற்றும் புதுச்சேரியிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

வாக்களிக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்கும் காகித பயன்பாட்டை நீக்குவதற்கும் இந்தியாவில் 1999 முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் (Electronic Voting Machines) பயன்படுத்தி வாக்குப்பதிவுச் செய்யப்படுகிறது.

EVM என்றால் என்ன?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், EVM என்றும் அழைக்கப்படுகிறது, இது வாக்களிக்க உதவும் மின்னணு சாதனமாகும். தேர்தல் செயல்முறையை பாதுகாப்பான, நியாயமான மற்றும் வெளிப்படையானதாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு EVM உருவாக்கப்பட்டுள்ளது.

EVM தகவல்களை மாற்ற முடியுமா?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது சிதைவில்லா இயந்திரம் ஆகும். இது ஒரு முறை நிரல்படுத்தக்கூடிய சிப் மூலம் இயக்கப்படுகிறது, இதை இணையம், வைஃபை, யூ.எஸ்.பி அல்லது புளூடூத் போன்ற எந்தவொரு வெளிப்புற சாதனம் அல்லது நெட்வொர்க்குடனும் இணைக்க முடியாது. எனவே, இதை எந்த வகையிலும் சிதைக்கவோ அல்லது இதிலுள்ள  தகவல்களை மாற்றவோ முடியாது.

வாக்குச் சாவடிகளுக்கு EVM களை ஒதுக்கீடு செய்வதற்கான செயல்முறை என்ன?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு விரிவான சீரற்றமயமாக்கல் செயல்முறை மூலம் வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இதன்படி, வாக்குப்பதிவு நடக்கும் தேதி வரை எந்த வாக்குப்பதிவு இயந்திரம் எந்த வாக்குச் சாவடிக்குச் செல்லும் என்பது குறித்து எந்தவொரு முன் அறிவிப்பும் இருக்காது. இயந்திரங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் சரியான வேலை நிலையில் வேலைச் செய்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக போலி வாக்கெடுப்புகளும் அவ்வப்போது நடத்தப்படும்.

EVM எவ்வாறு செயல்படுகிறது?

ஒரு EVM இரண்டு அலகுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது: ஒன்று கட்டுப்பாட்டு அலகு (Control Unit), இரண்டாவது வாக்குப்பதிவு அலகு (balloting unit). இந்த அலகுகள் ஒரு கேபிள் மூலம் இணைக்கப்படுகின்றன. EVM இன் கட்டுப்பாட்டு அலகு தலைமை அதிகாரி அல்லது வாக்குச்சாவடி அதிகாரியிடம் இருக்கும், வாக்குப்பதிவு அலகு வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் வாக்களிக்கும் பிரிவுக்குள் வைக்கப்பட்டிருக்கும். வாக்குப்பதிவு அதிகாரி உங்கள் அடையாளத்தை சரிபார்க்க இவ்வாறு செய்யப்படுகிறது.

EVM பயன்படுத்துவது எப்படி?

வாக்காளர் வாக்களிக்க ஏதுவாக, வாக்குச் சீட்டுக்குப் பதிலாக ஒரு பட்டனை அழுத்த வேண்டும். இயந்திரத்தின் வாக்குப்பதிவு அலகு வேட்பாளர் பெயர்கள் மற்றும் கட்சி சின்னங்களின் பட்டியலைக் கொண்டிருக்கும். வாக்காளர் அவர்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு அடுத்ததாக இருக்கும் பட்டனை அழுத்துவதன் மூலம் வாக்களிக்கலாம்.

வாக்காளர் தனது விருப்பப்படி ஒரு பட்டனை அழுத்தியதும், இந்த மின்னணு வாக்குப்பதிவு ​​இயந்திரம் தானே பூட்டிக் கொண்டு, அச்சிடப்பட்ட VVPAT சீட்டு 7 விநாடிகள் காண்பிக்கப்படும். அதன் பிறகு அது சீல் செய்யப்பட்ட வாக்குப் பெட்டிக்குச்  செல்லும். இந்த VVPAT என்பது Voter Verifiable Paper Audit Trail machine எனும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை பாதை இயந்திரங்களில் சேமிக்கப்படும்.

பின்னர், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை புதிய வாக்கு எண்ணுடன் மட்டுமே திறக்க முடியும். இந்த வழியில், ஒரு நபர் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதும் உறுதிச் செய்யப்படுகிறது.

இந்தியாவில் EVM பயன்படுத்தப்படுவது ஏன்?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இந்தியாவில் வாக்குச் சீட்டுகளுக்கு மாற்றாக 1982 ஆம் ஆண்டில் கேரளாவில் உள்ள எண். 70 பர்வூர் சட்டமன்றத் தொகுதியில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

அதிக அளவில், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1999 முதல் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. வாக்களிக்கும் செயல்முறையை எளிமையாக்கவும், வெறுமனே ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் வாக்குகளைப் பதிவு செய்யவும் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

நீண்ட கால பயன்பாட்டுக்கும் இந்த இயந்திரங்கள் செலவு குறைந்தவை. ஒரு EVM க்கான ஆரம்ப செலவு ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை இருந்தாலும், இயந்திரம் சராசரியாக 15 ஆண்டுகள் நீடிக்கும்.

மேலும், இயந்திரங்கள் பேட்டரிகளில் இயங்குகின்றன, எனவே மின்சாரம் தேவையில்லை. பெரிய வாக்குப் பெட்டிகளுடன் ஒப்பிடும்போது அவை இலகுவானவை மற்றும் சிறியவை.

இந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணும் செயல்முறையை விரைவாக செய்கின்றன, சில மணிநேரங்களுக்குள் முடிவுகளை கைமுறையாக எண்ணுவதற்கு பதிலாக முடிவுகளைச் சீக்கிரமாக வழங்குகின்றன.

Views: - 0

0

0

Leave a Reply