ஸ்கிம்மிங் என்றால் என்ன? ஏடிஎம் மோசடியைத் தவிர்க்க 5 டிப்ஸ்
21 January 2021, 6:08 pmஇந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் பலரும் பணம் எடுக்க ஏடிஎம் களுக்குத் தான் செல்கின்றனர். இதன் காரணமாக ஏடிஎம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், டெபிட் கார்டு பயனர்கள் ஸ்கிம்மிங் எனும் மோசடிக்கு பலியாகிறார்கள். ஸ்கிம்மிங் என்றால் என்ன, அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் புரிந்துகொள்வது முக்கியம். இதை தெரிந்துக்கொண்டு எச்சரிக்கையுடன் இருந்தால் ஏடிஎம் மோசடிகள் நடக்காமல் தடுக்க முடியும்.
ஸ்கிம்மிங் என்றால் என்ன?
ஸ்கிம்மிங் என்பது ஒரு தந்திரம், இதன் மூலம் ஸ்கிம்மர்கள் உங்கள் டெபிட் / கிரெடிட் கார்டு தரவைத் திருடி அதை குளோன் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை திருடுகிறார்கள். உங்கள் கார்டைக் குளோன் செய்ய மற்றும் உங்கள் ரகசிய PIN எண்ணைப் பதிவுசெய்ய, யாருக்கும் தெரியாத வகையில் கார்டு ரீடிங் ஸ்லாட்டில் ஒரு குளோனிங் சாதனத்தை இணைக்க ஸ்கேமர்கள் கேமரா அல்லது டூப்ளிகேட் கீபோர்டைப் பொறுத்திடுவார்கள். அதன் பிறகு உங்கள் தகவலை வைத்து டூப்ளிகேட் கார்டை உருவாக்கி பணத்தைத் திருடி விடுவார்கள்.
இதைத் தவிர்க்க, ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கும்போது பின்பற்ற வேண்டிய 5 உதவிக்குறிப்புகள்
- ஏடிஎம் இயந்திரம் மூலம் விநியோகிக்கப்படும் பணத்தை ஒருவர் எப்போதும் உடனடியாக எண்ண வேண்டும். ஆனால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செய்யுங்கள். உங்கள் பணத்தை எண்ணியதும் அதை பர்சில் வைத்து விடுங்கள். ஒருவேளை பணம் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால், கவலைப்பட வேண்டாம். வங்கிக்குச் சென்று உங்கள் புகாரைப் பதிவு செய்யுங்கள், அவர்கள் உங்களுக்கான தீர்வை வழங்குவார்கள். முன் எச்சரிக்கை இருப்பது எப்போதும் சிறந்தது.
- ஏடிஎம்மில் உங்கள் பண பரிவர்த்தனை முடிந்ததும், ‘ரத்துசெய் பொத்தானை’ அழுத்த வேண்டும். இதைச் செய்வதன் மூலம், உங்களுக்கு அடுத்து வருபவர் உங்கள் தகவல்களைப் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.
- உங்கள் ஏடிஎம் PIN எண்ணை அழுத்தும் போது எப்போதும் ஏடிஎம் கீபோர்டையும் ஏடிஎம் மெஷின் திரையையும் மறைத்தவாறு நிற்கவும். பரிவர்த்தனைகள் மிகவும் தனிப்பட்டவையாக இருக்க வேண்டும்.
- உங்கள் மினி ஸ்டேட்மென்ட் இருப்பை அவ்வப்போது சரிபார்க்கவும். இது சமீபத்தில் நீங்கள் எவ்வளவு பரிவர்த்தனை செய்தீர்கள் என்பது பற்றிய ஒரு யோசனையை உங்களுக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல், தேவையில்லாத மற்றும் நீங்கள் செய்யாத பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க உதவும்.
- போதுமான போக்குவரத்து வசதியுடன் நன்கு வெளிச்சமுள்ள இடங்களில் இருக்கும் ஏடிஎம் பயன்படுத்துவது நல்லது. இது போன்ற இடங்களில் திருட்டு நடப்பதற்கான வாய்ப்புக் குறைவு, மேலும் தேவைப்பட்டவுடன் எப்போதும் அருகிலேயே உதவி கிடைக்கும்.
0
0