வாட்ஸ்அப் OTP மோசடி என்றால் என்ன? இந்த மோசடி வலையில் விழாமல் இருப்பது எப்படி?

23 November 2020, 3:52 pm
What is WhatsApp OTP Scam How to prevent falling in trap
Quick Share

வாட்ஸ்அப் தற்போது பில்லியன் கணக்கான பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் அரட்டை பயன்பாடாகும். அதிகம் பயன்படுத்தப்படும் அரட்டை பயன்பாடாக இருப்பதால், மோசடி செய்பவர்கள் உங்கள் அரட்டைகளுக்கான அணுகலைப் பெற இந்த செயலியில் உள்ள தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்த நினைக்கின்றனர்.

வாட்ஸ்அப் தொடர்பான சமீபத்திய மோசடி பற்றி இதுவரை உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதை இப்போதே தெரிந்துக்கொண்டு விழிப்புடன் இருந்துக்கொள்ளுங்கள். 

இந்த மோசடியைப் பொறுத்தவரை, உங்கள் நண்பர் என்று கூறி ஒரு ஹேக்கர் உங்கள் தொலைபேசி எண்ணுக்கு அவர் / அவள் ஒரு OTP ஐ அனுப்பியதாக சொல்கிறார். அதை கொடுத்ததும் வேலையைக் காட்டி விடுவார். எப்படி என்று யோசிக்கிறீர்களா? வாருங்கள்  தெளிவாக பார்க்கலாம். 

வாட்ஸ்அப் OTP மோசடி: இது எவ்வாறு இயங்குகிறது?

முதலாவதாக, ஹேக்கர் உங்கள் நண்பர் என்று கூறி, ஒருவித அவசரநிலை என்று உங்களிடம் சொல்லுவார். அதாவது யாருக்காவது விபத்து, வெளியில் வந்தேன் பணம் இல்லை என்றெல்லாம் இல்லாத கதையை அடித்து விடுவார். அவர் / அவள் தற்செயலாக உங்கள் தொலைபேசி எண்ணுக்கு ஒரு OTP எண்ணை தற்செயலாக மாற்றிவிட்டேன் என்று கூறுவார். 

உங்கள் தொலைபேசி எண்ணில் வந்த OTP ஐ அப்படியே பேச்சுவாக்கில்  கேட்பார். OTP ஐ பெற உங்களை கவர்ந்திழுக்க அவர் பல்வேறு வழிகளில் முயற்சிப்பார். அப்படி நீங்கள் அனுமதியை வழங்கிவிட்டால், அது போன்ற OTP உங்கள் தனிப்பட்ட அரட்டைகள் மற்றும் குழு அரட்டைகள் அனைத்திற்கும் ஹேக்கருக்கும் அணுகலை வழங்க முடியும்.

ஹேக்கர் OTP ஐ பெற்றதும், உங்கள் வாட்ஸ்அப் கணக்கில்  நீங்களே உள்நுழைய முடியாது. பின்னர், ஹேக்கர் உங்கள் தொடர்புகளில் இருப்பவர்களிடம் நீங்கள் தான் என்று கூறி, பணம் பறிக்கலாம் அல்லது வேறு ஏதேனும் தகவல்களை  திருடக்கூடும்.

இதை தடுப்பது எப்படி?

உங்கள் கணக்கை அணுக ஹேக்கரைத் தடுக்கக்கூடிய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, இது  போன்ற OTP க்களை கேட்கும்போது உங்கள் நண்பர்களே என்றாலும் கொடுக்கக்கூடாது. அத்துடன், OTP போன்றவற்றை எல்லாம் கேட்கும்போது அந்த நபர் உண்மையில் உங்கள் நண்பர்  தானா அல்லது மோசடி செய்பவரா என்பதை நீங்கள் பேச்சுவாக்கில் தெரிந்துக்கொள்ள வேண்டும். 

இரண்டாவது வழி, உங்கள் வாட்ஸ்அப் கணக்கிற்கான இரண்டு-படி சரிபார்ப்பு அமைப்பை இயக்குவது. இது இயக்கப்பட்ட பிறகு, உங்கள் கணக்கில் உள்நுழைந்த பிறகு வாட்ஸ்அப் கூடுதலாக 6 இலக்க PIN ஐக் கேட்கும். இதனால் ஹேக்கர் OTP இருந்தாலும் உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாது.

இரண்டு-படி சரிபார்ப்பை இயக்க, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • வாட்ஸ்அப் அமைப்புகளைத் திறக்கவும்.
  • Account > Two-step verification > Enable என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்களுக்கு விருப்பமான ஆறு இலக்க PIN ஐ உள்ளிட்டு அதை உறுதிப்படுத்தவும்.
  • நீங்கள் அணுகக்கூடிய மின்னஞ்சல் முகவரியை வழங்கவும் அல்லது மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க விரும்பவில்லை என்றால் தவிர் (SKIp) என்பதைத் தேர்நதெடுக்கவும். 
  • வாட்ஸ்அப் ஒரு மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்கவும் பரிந்துரைக்கிறது, ஏனெனில் இது இரண்டு-படி சரிபார்ப்பை மீட்டமைக்க உங்களை அனுமதிக்கிறது, மேலும் உங்கள் கணக்கைப் பாதுகாக்க கூடுதல் உதவியாக இருக்கிறது.
  • அது முடிந்ததும் Next என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்து Save அல்லது Done என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

அவ்வளவுதான்! இப்போது நீங்கள் கூடுதல் பாதுகாப்புடன் பயமில்லாமல் இருக்கலாம்.

Views: - 30

0

0