வாட்ஸ்அப்ல வந்தாச்சு View Once ஆப்ஷன்! பங்கமாக கலாய்த்த டெலிகிராம்!

Author: Dhivagar
4 August 2021, 4:03 pm
WhatsApp adds disappearing photos feature
Quick Share

வாட்ஸ்அப் சமீப காலமாக பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் Disappearing Messages எனப்படும் மறையும் மெசேஜ்கள் அம்சத்தை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் இப்போது, படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு முறை பார்த்ததும் டெலிட் ஆகிவிடும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த புதிய அம்சம் ‘View Once’ என்று அழைக்கப்படுகிறது. இந்த View Once அம்சம் என்பது இன்ஸ்டாகிராமில் இருக்கும் disappearing media அம்சத்தைப் போன்றதாகும். இந்த புதிய அம்சத்தில், நீங்கள் ஒரு வீடியோ அல்லது படத்தை ஒருவருக்கு அனுப்பும்போது, View Once என்பதை குறிக்கும் ஐகானைக் கிளிக் செய்தால் ஒரு முறை பார்த்த பிறகு, அது தானாகவே மறைந்துவிடும்.

இருப்பினும், இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் இருப்பதை விட சற்று வித்தியாசமானது, ஏனென்றால் வாட்ஸ்அப்பின் மறையும் செய்திகள் அம்சத்தில் இருப்பதைப் போலவே, ‘View Once’ பயன்முறையை நீங்கள் இயக்கினால் மட்டுமே இந்த அம்சம் செயல்படும். 

இப்போது வெளியாகியுள்ள புதிய அப்டேட்டுடன் இந்த View Once அம்சம் அம்சம் வாட்ஸ்அப் ஆப்பிலும், வாட்ஸ்அப் வெப் தளத்திலும் கிடைக்கிறது. இந்த அம்சத்தை நீங்கள் இன்னும் பெறவில்லை என்றால் உங்கள் வாட்ஸ்அப்பை உடனே புதுப்பிக்க வேண்டும். தவிர, iOS பயனர்களுக்கும் இது விரைவில் கிடைக்கும்.

இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகமானதை ட்விட்டரில் வாட்ஸ்அப் அறிவித்திருந்தது. அதையடுத்து பயனர் ஒருவர், டெலிகிராமின் ட்விட்டர் id யை tag செய்து இது போன்ற அம்சத்தை டெலிகிராமும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். இதற்கு பதிலளித்த டெலிகிராம், நாங்கள் இதை 2017 ஆம் ஆண்டே செய்து விட்டோம். இது ரொம்ப பழசு என வாட்ஸ்அப்பை மறைமுகமாக கிண்டல் அடித்துள்ளது.

Views: - 336

0

0