வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துறீங்களா? அப்போ… இனிமே இதை கண்டிப்பா செய்யணும்!

29 January 2021, 12:59 pm
WhatsApp adds Face/Fingerprint unlock functionality while logging in to WhatsApp Web
Quick Share

வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பதிப்பில் கூடுதலான பாதுகாப்பு வசதியை வழங்குவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் உடன் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை உங்கள் கணினியுடன் இணைக்க விரும்பும்போது கூடுதல் பாதுகாப்பு கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.

மொபைல் போன் OS உடன் கிடைக்கும் முகம் அல்லது கைரேகை திறத்தல் அங்கீகார வசதியை கூடுதல் பாதுகாப்பு அங்கீகாரமாக வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொள்கிறது. வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப்பை இணைக்க, உங்கள் தொலைபேசியிலிருந்து QR குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கு முன்பு, உங்கள் தொலைபேசியில் உள்ள முகம் அல்லது கைரேகை திறத்தல் போன்றவற்றின் மூலம் அனுமதியை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள்.

இதன் மூலம் உங்கள் அனுமதியின்றி உங்கள் வீட்டில் இருப்பவர்களோ அல்லது உங்கள் அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்களோ உங்கள் வாட்ஸ்அப் கணக்கை அணுக முடியாது. 

இது வாட்ஸ்அப்பின் தற்போதைய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடுதலாக இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் வெப் / டெஸ்க்டாப் வாட்ஸ்அப் பதிப்பில் Login தேவைப்படும் போதெல்லாம் தொலைபேசியில் ஒரு அறிவிப்பு பாப் அப் ஆகும், நீங்கள் இல்லாத நேரத்தில் மற்றவர்கள் வாட்ஸ்அப்பை அணுக முயன்றால் நீங்கள் அதை தடுத்துக்கொள்ளலாம்.

சாதனங்களை இணைப்பதற்கான புதிய பாதுகாப்பு புதுப்பிப்பு, தொலைபேசிகளில் வாட்ஸ்அப் வலைப்பக்கத்திற்கு காட்சி மறுவடிவமைப்புடன், வரும் வாரங்களில் இணக்கமான சாதனங்களைக் கொண்ட பயனர்களுக்கு வெளியாகும்.

Views: - 0

0

0