வாட்ஸ்அப்பில் மொத்தமாக டெலிட் செய்யும் அம்சம் வெளியானது! அதை எப்படி பயன்படுத்தனும்?

4 November 2020, 8:14 pm
WhatsApp Bulk Delete Feature released How to use it
Quick Share

மொத்தமாக ஃபைல்களை நீக்குவதை எளிதாக்குவதற்கு வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் அதன் சேமிப்பு மேலாண்மைத் திரையில் கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக புதிய தோற்றத்தை அறிவித்துள்ளது.

  • நீங்கள் இப்போது வாட்ஸ்அப்பின் Settings க்குச் சென்ற பின்னர் ‘Storage and Data’ பிரிவுக்குச் செல்லலாம். 
  • புதிய UI ஐப் பார்க்க நீங்கள் இப்போது Manage Storage என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். 
  • புதிய பயனர் இடைமுகத்தில் (UI), 5MB ஐ விடப் பெரிய மற்றும் பல முறை அனுப்பப்பட்ட ஃபைல்களைக் காண்பிக்கும் கீழே 2 புதிய பிரிவுகளுடன் ஒரு ஸ்டோரேஜ் மீட்டரைப் காண்பீர்கள்.

பின்னர், அந்த குறிப்பிட்ட பிரிவில் உள்ள மீடியா ஃபைல்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் அம்புக்குறியைக் கிளிக் செய்து, மீடியாவை முன்னோட்டமிடவும், அவற்றை அளவுப்படி வரிசைப்படுத்தவும், பல படங்களைத் தேர்ந்தெடுத்து பின்னர் அனைத்தையும் ஒரே கிளிக்கில் நீக்கவும் உங்களுக்கு விருப்பம்  கிடைக்கும்.

ஸ்டோரேஜ் அதிகமாக இருந்தால் வாட்ஸ்அப் இப்போது அரட்டை திரையில் ஒரு எச்சரிக்கை அட்டையையும் (warning card) காண்பிக்கும். நீங்கள் அதைத் தட்டி உடனடியாக வாட்ஸ்அப்பில் உள்ள சேமிப்பக பிரிவுக்குச் செல்லலாம்.

ஒரு குறிப்பிட்ட அரட்டையில் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீடியாவை நீங்கள் சரிபார்க்கக்கூடிய முந்தைய செயல்பாடு இன்னும் கீழே ஸ்கிரோல் செய்யும்போது கிடைக்கும். புதிய அம்சம் இந்த வாரத்தில் அனைத்து பயனர்களுக்கும் உலகளவில் வெளியாகும்.

இதனுடன் Join Missed Call feature என்ற மற்றொரு அம்சத்திலும் வாட்ஸ்அப் சமீபத்தில் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பெயரிலேயே  குறிப்பிடுவது போல, இந்த அம்சம் பயனர்கள் முன்பு தவறவிட்ட குழு வீடியோ அல்லது குரல் அழைப்பில் இந்த அம்சம் சேர அனுமதிக்கும். அழைப்பு இன்னும் தொடர்ந்தால் மட்டுமே இந்த அம்சம் செயல்படும். அழைப்பு முடிந்துவிட்டால், அழைப்பில் சேருவதற்கான விருப்பம் தோன்றாது என்பதையும்  நினைவில் கொள்ள வேண்டும்.

Views: - 20

0

0