மறையும் செய்திகளை அடுத்து மறையும் படங்கள்! சிக்னலை காப்பியடிக்கும் வாட்ஸ்அப்பின் புது அம்சம்!

3 March 2021, 5:23 pm
WhatsApp might add support for disappearing images
Quick Share

வாட்ஸ்அப் உலகளவில் மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மெசேஜிங் பயன்பாடுகளில் ஒன்று என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. இது சிக்னல், டெலிகிராம் போன்றவற்றுக்குப் போட்டியாக இருக்கு தனது மெசேஜிங் தளத்தில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மூன்றாம் தரப்பு அனிமேஷன் ஸ்டிக்கர் பேக்குகளுக்கான ஆதரவை சேர்ப்பதாக நிறுவனம் அறிவித்ததை அடுத்து, ஒரு புதிய பிரைவேட் சாட் அம்சத்திலும் வாட்ஸ்அப் செயல்படுவதாக ஒரு புதிய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

வாட்ஸ்அப் அம்சங்களைப் பற்றி தகவலை வெளியிடும் WABetaInfo தகவலின் படி, பேஸ்புக்கிற்குச் சொந்தமான செய்தியிடல் சேவை iOS மற்றும் Android சாதனங்களில் புதிதாக ஆட்டோ-டெலிட் புகைப்பட அம்சத்தைச் சேர்க்கத் தயாராகியுள்ளது தெரியவந்துளது. இந்த அம்சம் பயனர்களை மற்ற வாட்ஸ்அப் பயனர்களுக்கு புகைப்படங்களை அனுப்ப அனுமதிக்கும், மேலும் அவற்றை பெறுபவர் ஒரு முறை பார்த்த பிறகு அவை பெறுநரின் சாதனத்திலிருந்து தானாகவே மறைந்துவிடும்.

இந்த அம்சம் சிக்னலின் “View Once” ஊடக பகிர்வு அமைப்பைப் போலவே இருக்கிறது, இது பார்த்ததும் மறைந்துவிடும் வீடியோக்களையும் படங்களையும் அனுப்ப உங்களை அனுமதிக்கிறது – இது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

WABetaInfo பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்களின் அடிப்படையில், பயனர்கள் புகைப்படங்களைக் கிளிக் செய்யலாம் அல்லது அவர்களின் கேலரியில் இருந்து படங்களை எடுக்கலாம் (அல்லது iOS இல் கேமரா ரோல்) மற்றும் அடுத்ததாக தோன்றும் 1 என்ற ஐகானுடன் தோன்றும் புதிய பொத்தானைத் தட்டுவதன் மூலம் ஒரு படத்தை மற்றொரு வாட்ஸ்அப் பயனருடன் பகிரலாம். இந்த படங்களுக்கு முன்னோட்டம் இருக்காது மற்றும் அதற்கு பதிலாக அரட்டையில் “Tap To View” என்ற செய்தியைக் காண்பிக்கும்.

வாட்ஸ்அப் வழியாக பகிரப்படும் வழக்கமான படங்களைப் போலல்லாமல், இந்த ஆட்டோ டெலிட் புகைப்படங்களை பயன்பாட்டிலிருந்து அல்லது உங்கள் கேமரா ரோலுக்கு எக்ஸ்போர்ட் செய்ய முடியாது என்று WABetaInfo தெரிவித்துள்ளது. 

இந்த அம்சத்துடன் ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் அம்சத்தை நீக்கும் செயல்பாட்டை வாட்ஸ்அப் இன்னும் செயல்படுத்தவில்லை என்றும் தெரிகிறது. IOS இல் ஸ்கிரீன் ஷாட்களைத் தடுக்க வழி இல்லாததால் ஒரு முறை பார்க்கும் அம்சம் இருந்தும் பயனில்லாததாகவே இருக்கும். இருப்பினும், அது போன்ற அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 1

0

0