வாட்ஸ்அப் Read Later அம்சம் விரைவில்..! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் இதோ

20 November 2020, 10:43 am
WhatsApp Read Later Feature Is Likely Coming Soon
Quick Share

சமீப காலமாக பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வாட்ஸ்அப் பல புதிய அம்சங்களை உருவாக்கி வருகிறது. காப்பகப்படுத்தப்பட்ட அரட்டைகளின் (Archived Chats) புதிய பதிப்பான ‘Read Later’ அம்சத்தை நிறுவனம் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன் பெயர் குறிப்பிடுவது போல, தேர்ந்தெடுக்கப்பட்ட அரட்டைகளை பயனர்கள் விரும்பும் வரை மியூட் செய்து விட்டு பின்னர் படிக்கலாம்.

இது நீண்ட காலமாக சோதனைகளில் இருக்கும் Vacation Mode பயன்முறையைப் போலவே செயல்படுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ள காப்பகப்படுத்தப்பட்ட அரட்டைகள் மற்றும் வரவிருக்கும் Read Later அம்சம் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால், Read Later அம்சத்தை நீங்கள் இயக்கிவிட்டால் புதிய செய்திகள் வரும்போதெல்லாம் பயனர்கள் அறிவிப்பு எதையும் பெறமாட்டார்கள்.

Read Later அம்சமும் காப்பகப்படுத்தப்பட்ட அரட்டை அம்சம் போன்றதுதான், ஆனால் இது அதைவிட மேம்படுத்தப்பட்ட சற்று சிறந்த பதிப்பாகும். ​​நீங்கள் பின்னர் படிக்க விருப்பத்திற்கு ஒரு தொடர்பைச் சேர்த்தவுடன், மெசேஜ் அல்லது அழைப்பு அல்லது வேறு எதைப்பற்றியும் அறிவிப்புகள் உங்களுக்கு காண்பிக்கப்படாது.

குறிப்பாக, பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் ஒரு தொடர்பை இந்த அம்சத்திற்கு இயக்கலாம் அல்லது முடக்கலாம். இந்த அம்சம் சமீபத்தில் iOS க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் காணப்பட்டது, குறிப்பாக பதிப்பு எண் 2.20.130.1. உடன் காணப்பட்டது. விரைவில் இது குறித்த கூடுதல் புதுப்பிப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0