வாட்ஸ்அப் காணாமல் போகும் மெசேஜ் அம்சத்தில் புதிய வசதி | எப்படி இயக்க வேண்டுமென்று தெரியுமா?

Author: Hemalatha Ramkumar
20 August 2021, 2:18 pm
WhatsApp set to add a new option for disappearing messages feature
Quick Share

வாட்ஸ்அப் சமீபத்தில் “View Once” அம்சத்தை தனது தளத்தில் சேர்த்தது. இந்த அம்சத்தில் மெசேஜை அனுப்பும் போது இந்த அம்சத்தை இயக்கிவிட்டால், பெறுநர் ஒரு முறை மெசேஜை பார்த்ததும், மெசேஜ் தானாகவே மறைந்துவிடும். 

இதற்கு முன்னதாக Disappearing Messages எனும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்தது. அந்த அம்சத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மெசேஜ் மறைந்துவிடும் படி அமைக்க முடியும். இப்போது அந்த அம்சத்தில் 90 நாட்கள் நேர வரம்புடன் கூடிய புதிய அமைப்பை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. அதன்படி 90 நாட்கள் நேர வரம்பை இயக்கினால், குறிப்பிட்ட நேர வரம்பிற்கு பிறகு நீங்கள் அனுப்பிய அனுப்பப்படும் செய்திகள் தானாகவே மறைந்துவிடும்.

பயனர்கள் 7 மற்றும் 90 நாட்கள் விருப்பங்களைத் தவிர 24 மணி நேர விருப்பத்தையும் பயன்படுத்த முடியும். வாட்ஸ்அப் இன்னும் பயனர்களுக்கு தனிப்பயனாக்கக்கூடிய அதாவது தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரியான நேர வரம்பை அமைப்பதற்கான வசதியை வழங்கவில்லை. ஆனால் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற வாட்ஸ்அப்பின் போட்டி மெசேஜிங் பயன்பாடுகளில் சில நொடிகள் முதல் மணிநேரங்கள் அல்லது நாட்கணக்கில் மறையும் செய்திகள் அம்சத்தை இயக்குவதற்கான வசதி உள்ளது.

எதிர்கால மேம்படுத்தலில் மேலும் பல புதிய விருப்பங்கள் கிடைக்கும் என்றும் WaBetaInfo தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பின் 2.21.9.6 ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் புதிய அம்சத்தை பெற முடியும். ஒரு செய்தி மறைவதற்கு முன்பு அதை நீங்கள் பேக்அப் எடுத்தால், காணாமல் போகும் செய்தி பேக்அப் உடன் சேர்க்கப்படும். ஆனால் பயனர் அதை பேக்அப்பிலிருந்து ரீஸ்டோர் செய்யும்போது அந்த செய்தி மறைந்து போகும் அம்சம் இயக்கப்பட்ட செய்திகள் நீக்கப்படும்.

பயனர் ஏழு நாட்களில் வாட்ஸ்அப்பை திறக்கவில்லை என்றால், செய்திகள் தானாகவே மறைந்துவிடும். இருப்பினும், வாட்ஸ்அப் திறக்கும் வரை செய்தியின் முன்னோட்டம் அறிவிப்புகளில் காட்டப்படும். 

வாட்ஸ்அப்பில் Disappearing messages அம்சத்தை நீங்கள் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது இங்கே.

வாட்ஸ்அப்: காணாமல் போகும் செய்திகளை இயக்குவது எப்படி?

படி 1: உங்கள் Android அல்லது iOS ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் அரட்டையைத் திறந்து, ஏதேனும் ஒரு chatஐ பார்வையிடவும்.

படி 2: நீங்கள் தொடர்பின் பெயரைக் கிளிக் செய்யவும், பின்னர் “Disappearing Messages” எனும் அமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3: அடுத்து Continue என்பதைத் தேர்ந்தெடுத்து மற்றும் On விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். காணாமல் போகும் செய்திகளை முடக்க விரும்பினால், நீங்கள் இந்த அமைப்பிற்குத் திரும்பிச் சென்று ஆஃப் செய்துக்கொள்ளலாம். குழு அரட்டையில் காணாமல் போகும் செய்திகளை இயக்கவும் இதே செயல்முறையை நீங்கள் பின்பற்றலாம்.

Views: - 727

1

0