இவர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப்பின் மறைந்துபோகும் செய்திகள் அம்சம் வெளியீடு!

12 November 2020, 8:04 pm
WhatsApp starts rolling out disappearing messages to beta users
Quick Share

வாட்ஸ்அப் கடந்த வாரம் Disappearing Messages எனப்படும் மறைந்துப் போகும் செய்திகள் அம்சத்தை வெளியிடுவதாக அறிவித்தது. புதிய அம்சம் இந்த மாதத்திற்குள் Android மற்றும் iOS இல் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும். ஆண்ட்ராய்டில் பீட்டா சோதனையாளர்களுக்கு மறைந்துபோகும் செய்திகள் அம்சத்தை வாட்ஸ்அப் இப்போது வெளியிடத் தொடங்கியுள்ளது.

Android இல் உள்ள WhatsApp பீட்டா பயனர்கள் இப்போது இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இது மெதுவாக வெளிவந்து வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.20.206.9 உடன் கிடைக்கிறது. இது மெதுவான வெளியீடு என்பதால், அனைத்து பீட்டா பயனர்களையும் அடைய நேரம் ஆகலாம், என்று WABetaInfo குறிப்பிட்டுள்ளது. 

நீங்கள் வாட்ஸ்அப் பீட்டா பயனராக இருந்தால் இந்த அம்சம் கிடைக்கிறதா என்று சோதிக்கலாம். Contact Info ஐத் திறந்து, மறைந்துபோகும் செய்திகள் அம்சம் இருக்கிறதா என்று பார்க்கலாம். குழு அரட்டைகளுக்கு, Group Info மூலம் நிர்வாகிகள் இதைச் சரிபார்க்கலாம்.

அம்சம் கிடைத்தால், நீங்கள் அதை இயக்கலாம், மறைந்து போகும் செய்திகள் அம்சம் செயல்படுத்தப்படும். இயக்கப்பட்டதும், அந்த குறிப்பிட்ட அரட்டைக்கு அனுப்பப்படும் செய்திகள் ஏழு நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும். அம்சம் இயக்கப்பட்ட பின் அனுப்பப்பட்ட செய்திகளை மட்டுமே இது மறைய செய்யும், அதற்கு முன் அனுப்பட்ட செய்திகளை அல்ல.

வாட்ஸ்அப்பின் மறைந்துபோகும் செய்திகளின் அம்சம் சில வரம்புகளுடன் வருகிறது. செய்திகளின் உள்ளடக்கம் ஏழு நாட்களுக்குப் பிறகு மறைந்தாலும் அறிவிப்புகளின் முன்னோட்டத்தில் (Notification Preview) இன்னும் தெரியும். மேற்கோள் காட்டப்பட்ட மற்றும் பதிலளிக்கப்பட்ட செய்திகளின் ஒரிஜினல் மெசேஜ் மறைந்தாலும் அரட்டையில் இருக்கும்.

இந்த அம்சம் பகிரப்பட்ட செய்திகளிலும் இயங்காது. நீங்கள் காணாமல் போகும் செய்தியை அனுப்பியிருந்தால், அது அசல் அரட்டையிலிருந்து மறைந்த பின்னரும் பகிரப்பட்ட அரட்டையில் தோன்றும். மறைந்துபோன செய்திகளையும் நீங்கள் காப்புப் பிரதி எடுக்கலாம், ஆனால் அரட்டைகள் மீட்டமைக்கப்பட்டதும் அது பின்னர் தோன்றாது.

வாட்ஸ்அப் அதன் iOS பீட்டா பயன்பாட்டிற்கும் மறைந்து போகும் செய்திகள் அம்சத்தை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விரைவில் நிலையான பதிப்பை அடைய வேண்டும், எனவே அனைத்து பயனர்களும் இதைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

Views: - 14

0

0