வாட்ஸ்அப்பில் ஒரு செமயான அம்சம் வரப்போகுதாம் தெரியுமா..!!!

Author: Hemalatha Ramkumar
27 November 2021, 2:33 pm
Quick Share

எதிர்காலத்தில் வாட்ஸ்அப்பில் வர இருக்கும் ஒரு அதிரடியான முக்கிய அம்சம் மெசேஜ் ரியாக்ஷன்கள் ஆகும். இந்த ரியாக்ஷன் ஐகான்கள் வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் நண்பர்கள் அனுப்பும் மெசேஜ்களுக்கு ரியாக்ட் செய்ய அனுமதிக்கும். இந்த அம்சம் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் கிடைக்கிறது.

இந்த தகவல் WABetaInfo மூலமாக நமக்கு கிடைத்துள்ளது. இப்போது வாட்ஸ்அப் தளமானது புதிய எதிர்கால அப்டேட்டில் வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்ஷன்களை சேர்க்கலாம் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த அம்சம் உருவாக்கத்தில் உள்ளது மற்றும் பீட்டா பயனர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.

மெசேஜ் ரியாக்ஷன்களைத் தவிர, ஒவ்வொரு மெசேஜூம் ஒரு ரியாக்ஷன் இன்ஃபோ டேபினைக் கொண்டிருக்கும் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது. இந்த பகுதி பயனர்கள் ஒரு மெசேஜிற்கு கொடுக்கப்பட்ட பல்வேறு ரியாக்ஷன்களைப் பார்க்க அனுமதிக்கும்.

அனைத்து ரியாக்ஷன்களும் ‘All’ டேபில் பட்டியலிடப்பட்டுள்ளன என்பதை ஒரு ஸ்கிரீன் ஷாட் வெளிப்படுத்துகிறது. மற்ற ஈமோஜி ரியாக்ஷன்கள் அவற்றின் சொந்த தனி டேப்களைக் கொண்டிருக்கும். பயனர்கள் ஒரு மெசேஜிற்கு ஒருமுறை மட்டுமே பதிலளிக்க முடியும் என்றும் ரியாக்ஷன்கள் ஆறு எமோஜிகளுக்கு மட்டுப்படுத்தப்படும் என்றும் அறிக்கை கூறுகிறது.

இந்த அம்சம் தற்போதைக்கு iOS க்கான WhatsApp க்காக உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும், இது Android க்கான WhatsApp க்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் விண்டோஸ் பயனர்களுக்காக வாட்ஸ்அப் ஒரு பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்தியது. மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் காணக்கூடிய இந்த செயலி இன்னும் முழுமையாக பிழை இல்லாததாக இருந்தாலும், வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்பு போன்ற திறன்களை வழங்கும் வாட்ஸ்அப் வெப்பை விட பல அம்சங்களை கொண்டு இருக்கும்.

Views: - 232

0

0