வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும்போது இந்த அம்சத்தை கவனிச்சீங்களா? இதை யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!

Author: Hemalatha Ramkumar
14 August 2021, 3:56 pm
WhatsApp Web, desktop app finally get image editing tools
Quick Share

வாட்ஸ்அப் தனது மொபைல் பயன்பாட்டுக்கும் வாட்ஸ்அப் வெப் பதிப்பிற்கும் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், இப்போது வாட்ஸ்அப் வெப் பதிப்பிற்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதில் வாட்ஸ்வெப்பின் browser mode மற்றும் Desktop பயன்பாட்டில் போட்டோக்களை Edit செய்வதற்கான அம்சத்தை சேர்த்துள்ளது. 

முன்னதாக இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் பீட்டா பதிப்பில் அறிமுகமானது, அதையடுத்து இப்போது இந்த அம்சம் பொது பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுநாள் வரையில், இந்த போட்டோ எடிட்டிங் அம்சம் வாட்ஸ்அப்பில் மொபைல் ஆப் பதிப்பில் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் இப்போது வாட்ஸ்அப் வெப் ஆப்பிற்கும் கிடைத்துள்ளது. 

இதனால், டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் வெப் ஆப்பயன்படுத்தும் பலரும் இந்த அம்சத்தைப் பெறமுடியாமல் இருந்தது. 

இனிமேல் அந்த கவலை இல்லை. டெஸ்க்டாப்பின் வாட்ஸ்அப் வெப் பதிப்பிலும் போட்டோக்களை எடிட் செய்து அனுப்ப முடியும். 

வாட்ஸ்அப் வெப் பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பட எடிட்டிங் கருவிகள் ‘Drawing tools’ என அழைக்கப்படும் அம்சத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

இதன் மூலம் ஒரு பயனர் ஒரு போட்டோவை ஒருவருக்கு அனுப்புவதற்கு முன்பு எடிட் செய்து மாற்றவும் புதிதாக text அல்லது வேறு ஏதேனும் திருத்தங்களை செய்ய வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. 

Views: - 639

0

0