என்ன சொல்றீங்க…இவர்கள் எல்லாம் சிம் கார்டு வாங்க முடியாதா…???

Author: Hemalatha Ramkumar
27 September 2021, 9:30 am
Quick Share

தொலைத்தொடர்பு துறை புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதன்படி 18 வயதிற்கு குறைவான சிறுவர்களுக்கு சிம் கார்டு பெற அனுமதி இல்லை. இதன் படி , எந்தவொரு வாடிக்கையாளரும் 18 வயதுக்கு குறைவாக இருந்தால், அவர் நாட்டில் உள்ள எந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்தும் சிம் வாங்க முடியாது.

DoT(Department of Telecommunication) படி, புதிய சிம் வாங்க, வாடிக்கையாளர்கள் கையகப்படுத்தல் (CAF)படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த படிவம் வாடிக்கையாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கும் தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர் இடையிலான ஒரு ஒப்பந்தமாகும். இந்த படிவங்களில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இடம்பெற்று இருக்கும். அவை வாடிக்கையாளர்கள் மற்றும் TSP (telecom service providers)களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

சிம் கார்டுகளுக்கான 11 வது பிரிவு:
தொலைத்தொடர்புத் துறையின் விதி படி வாடிக்கையாளர்கள் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். ஒரு படிவம் அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது வாடிக்கையாளர்கள் சுய நினைவுடன் இருக்க வேண்டும். ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அறிந்து கொள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உரிமை உண்டு. மேலும் DoT,ஏற்கனவே நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடனும் வழிகாட்டுதல் விதிகளை பகிர்ந்துகொண்டுள்ளது. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் படி கேட்டுக்கொண்டுள்ளது.

எத்தனை சிம் கார்டுக்கள் அனுமதிக்கப்படுகிறது?
DOT சட்டப்படி, ஒரு வாடிக்கையாளர் 18 சிம்களை அவரின் பெயரிலும், 9 சிம்களை சாதாரண தகவல்தொடர்புகளுக்காக பெற முடியும்.9 சிம்களை M2M தொடர்பு மூலம் பெறலாம்.M2M சிம் பெற, வாடிக்கையாளர்கள் சரிபார்ப்பு படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.தங்கள் தொலைதொடர்புசாதனங்களை மாற்றும் போது, வாடிக்கையாளர்கள் தங்கள் புதிய விவரங்களை சேர்க்க வேண்டும்.

அதிகரித்து வரும் மோசடி சிம் கார்டுகளின் வழக்குகள் காரணமாக, வாடிக்கையாளர் பெயர்களில் அங்கீகரிக்கப்படாத சிம் கார்டுகளை சரிபார்க்க புதிய நடவடிக்கைகளை அறிவிக்க DOT கட்டாயப்படுத்தியுள்ளது.

அங்கீகரிக்கப்படாத சிம் கார்டுகளை சரிபார்க்க சில படிகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.
படி 1: வாடிக்கையாளர்கள் tafcop.dgtelecom.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
படி 2: இப்போது, ​​அவர்கள் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.OTP ஐ தேர்வு செய்யவும்.
படி 3: அதன் பிறகு, வாடிக்கையாளர்கள் OTP ஐ பதிவு செய்து சமர்ப்பி விருப்பத்தைத் தட்டவும்.
படி 4: இப்போது, ​​வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட அனைத்து மொபைல் எண்களையும் பார்க்க முடியும்.

Views: - 295

0

0