Windows 11 அதிகாரப்பூர்வ வெளியீடு விரைவில் | அதற்கு முன் டவுன்லோடு செய்யவும் முடியும்!

16 June 2021, 12:50 pm
Windows 11 Is Real And People Are Already Using It: Download Windows 11
Quick Share

மைக்ரோசாப்ட் அடுத்த தலைமுறை Windows OS ஆன Windows 11 ஐ ஜூன் 24 அன்று வெளியிட உள்ளது. Windows 10 OS அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய OS அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Windows 11 OS ஏற்கனவே பல அதிகாரப்பூர்வமற்ற தளங்களில் ஆன்லைனில் கிடைக்கின்றன. பயனர்கள் அதை அவர்களின் கணினிகளில் இப்போதைக்கு இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் தொழில்நுட்ப பிரிவில் அனுபவமிக்கவராக இருந்து Windows 11 OS ஐ இன்ஸ்டால் செய்ய ஆர்வமாக இருந்தால், Windows 10 ஓஎஸ்ஸில் இயங்கும் PC க்களில் அதிகாரப்பூர்வமற்ற தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

Windows 11: புதிய அம்சங்கள்

Windows 10 உடன் ஒப்பிடும்போது, ​​Windows 11 OS நவீன தோற்றமுடைய ஃபிளாட் ஐகான்கள், புதிய Start மெனு, வட்டமான மூலைகள் மற்றும் பலவற்றைக் கொண்ட ஒரு பெரிய வடிவமைப்பு மாற்றத்தைக் கொண்டுள்ளது. 

Windows 11 Is Real And People Are Already Using It: Download Windows 11

Windows 11 ஆனது Windows 10 இன் சுத்திகரிக்கப்பட்ட பதிப்பைப் போல தோற்றமளிக்கிறது மற்றும் touch screen கொண்ட மற்றும் touch அல்லாத சாதனங்களுக்கும் உகந்ததாக இருக்கும். Windows 11 இல் உள்ள Start மெனு Windows 10X மாடலில் இருந்ததைப் போன்று. மைக்ரோசாப்ட் சமீபத்தில் Windows 10X ஐ நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Windows 11 இன் மற்றொரு சுவாரஸ்யமான காட்சி அம்சம் என்னவென்றால், இது இப்போது பயன்பாட்டு ஐகான்களை திரை நடுவே கொண்டுள்ளது. அதையடுத்து, நிறுவனம் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐகானையும் ஒரே மாதிரியான பாணியில் புதுப்பித்துள்ளது, இது ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த தோற்றத்தை வழங்குகிறது. அதோடு, Windows 11 இப்போது ஒரு புதிய தொடக்க ஒலியையும் கொண்டுள்ளது, இது Windows 10 இன் தொடக்க ஒலியுடன் ஒப்பிடும்போது மிகவும் இனிமையானதாக இருக்கும்.

Windows 11 அமைப்பு

Windows 11 OS க்கான Setup புகைப்படங்களை ஒரு சிலர் பகிர்ந்துள்ளனர், இது Windows 10 இல் இருந்த Setup செயல்முறையைப் போலவே தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல், Windows 11 இன் Windows 11 ஹோம், Windows 10 ப்ரோ, Windows 11, மற்றும் Windows 11 கல்வி போன்ற பல பதிப்புகளும் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Windows 11 Is Real And People Are Already Using It: Download Windows 11

பொருந்தக்கூடிய தன்மையைப் பொறுத்தவரையில், Windows 10 OS உடன் இயங்கும் எந்த PC அல்லது லேப்டாப்பும் Windows 11 OS உடன் முழுமையாக இணக்கமாக இருக்க வேண்டும். Windows 11 OS 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே, 32 மிட் CPU மூலம் இயக்கப்படும் பழைய மடிக்கணினிகள் மற்றும் PC க்களில் கூட இந்த OS செயல்படும்.

Views: - 260

1

0