விங் லைஃப்ஸ்டைல் பிராண்டின் விங் எலிவேட் நெக் பேண்ட் அறிமுகம் | விலை & விவரங்கள்
27 November 2020, 5:31 pmவிங்ஸ் லைஃப்ஸ்டைல் இன்று அதன் விங்ஸ் எலிவேட் நெக் பேண்ட் புளூடூத் 5.0 வயர்லெஸ் இயர்போன்களை ரூ.1399 விலையில் வெளியிட்டுள்ளது. இது அமேசானில் இருந்து வாங்க கிடைக்கும். விங்ஸ் எலிவேட் கருப்பு, சாம்பல் மற்றும் டீல் ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கும்.
விங்ஸ் எலிவேட் ஒரு சிலிகான் நெக் பேண்டைக் கொண்டுள்ளது. அவை டூயல் பேரிங் அம்சத்துடன் வருகின்றன, இதன் உதவியுடன், ஒரே நேரத்தில் 2 சாதனங்களுடன் இயர்போன்களை இணைக்க முடியும், எனவே நீங்கள் மடிக்கணினியில் மியூசிக் / வீடியோ மீட்டிங் மற்றும் மொபைலில் தொலைபேசி அழைப்புகளுக்கு இடையே ஈசியாக மாறலாம்.
நிறுவனத்தின் தகவலின்படி, 20 நிமிடங்கள் மட்டும் சார்ஜ் செய்வதன் மூலம் 4 மணிநேரம் வரை இது இயங்கும், இது மொத்தம் 10 மணிநேர இயக்க நேரத்தை வழங்குகிறது. இயர்போன்ஸ் ஆடியோ தரத்திற்காக 10 மிமீ நியோடைமியம் டிரைவரைக் கொண்டுள்ளது. இயர்போன்களில் புளூடூத் 5.0 பேக்கேஜிங் நெக் பேண்ட் இயர்போன், சார்ஜிங் கேபிள், பயனர் மேனுவல் மற்றும் 3 செட் இயர்டிப்ஸ் ஆகியவை இருக்கும்.
0
0