கேமரா மற்றும் போட்டோகிராபியின் வரலாறு | ஏன் ஆகஸ்ட் 19 உலக புகைப்பட தினம் ஆக கொண்டாடப்படுகிறது?

19 August 2020, 8:54 pm
World Photography Day 2020: History Of Photography, Camera, And Why August 19?
Quick Share

ஆகஸ்ட் 19 அன்று கொண்டாடப்படும் உலக புகைப்பட தினம் என்பது கலை, அறிவியல், கைவினை மற்றும் புகைப்பட வரலாறு ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய கொண்டாட்டத்தை குறிக்கிறது. இந்த நாளில், புகைப்படக் கலைஞர்கள் தங்கள் கலையை ஊக்குவிக்க புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இருப்பினும், இந்த நாளின் வரலாறு மற்றும் நோக்கம் குறித்து நமக்குப் பெரும்பாலும் தெரியாது.

புகைப்படம் எடுத்தல் மற்றும் கேமராவின் வரலாறு

உலக புகைப்பட தினத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும். கேமரா படத்தின் ஓரளவு வெற்றிகரமான புகைப்படம் 1816 ஆம் ஆண்டில் நைஸ்போர் நீப்ஸ் (Nicephore Niepce) என்பவரால் படம் பிடிக்கப்பட்டது. அவர் ஒரு சிறிய கேமராவை உருவாக்கி, வெள்ளி குளோரைடு பூசப்பட்ட ஒரு காகிதத்தைப் படம் பிடித்தார், அது வெளிச்சத்திற்கு வெளிப்படும் போது இருட்டாகிவிட்டது.

அந்த கேமரா ஒரு டாக்ரூடைப் அதாவது பாதரச ஆவிமூலம் நிழற்படமெடுக்கும் முறையிலான கேமரா ஆகும் மற்றும் புகைப்பட செயல்முறையை பிரெஞ்சுக்காரர் ஆன லூயிஸ் டாகுவேர் உருவாக்கியுள்ளார். பின்னர் 1839 ஆம் ஆண்டில், பிரெஞ்சு அகாடமி ஆஃப் சயின்சஸ் இந்த செயல்முறையை அறிவித்தது, பிரெஞ்சு அரசாங்கம் இந்த கண்டுபிடிப்பை உலகிற்கு பரிசாக வழங்கியது. முதல் நீடித்த வண்ண புகைப்படம் தாமஸ் சுட்டன் (Thomas Sutton) அவர்களால் 1861 இல் எடுக்கப்பட்டது.

பின்னர், புகைப்படங்கள் தகவல்தொடர்பு ஊடகமாக மாறியது, குறிப்பாக ஆதாரங்களை மீட்டெடுப்பதற்கும், வரலாற்று ரீதியாக மாறிய தருணங்களை படம் பிடிப்பதற்கும்  உதவியது. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கான மதிப்புள்ளது என்று நாம் இன்று சொல்வதற்கு புகைப்படங்களும் கேமராக்களும் தான்  முக்கிய காரணம் ஆகும்.

ஆகஸ்ட் 19 உலக புகைப்பட தினமாக ஏன் கொண்டாடப்படுகிறது?

முதல் டிஜிட்டல் புகைப்படம் ஆகஸ்ட் 19, 1957 இல் தான் படம்பிடிக்கப்பட்டது, இது கோடக் பொறியியல் மற்றும் முதல் டிஜிட்டல் கேமராவை கண்டுபிடிப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்னதாகும். இதுவே உலக புகைப்பட தினம் இந்நாளில் கொண்டாடப்படுவதற்கான காரணமாகும். இந்த நாள் 2010 ஆம் ஆண்டு முதல் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தான் முதல் உலகளாவிய ஆன்லைன் கேலரி உருவானது.

உலகெங்கிலும் இருந்து மக்கள் உலக புகைப்பட தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஒரே கணக்கில் பல கருப்பொருள்கள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த நாள் கலையை அதிக பேரிடம் கொண்டு சேர்க்கவும் அவர்களின் படைப்பாற்றலை ஆராய்வதற்கும் அதிகமான மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக புகைப்பட நாள் 2020

இன்று, ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்கும் வரை வளர்ந்துவிட்ட நுட்பம்  படம்பிடிக்கும் முறையையே வெகுவாக மாற்றிவிட்டது. குறைந்த ஒளி, அகல-கோணம் மற்றும் அதி-அகல-கோண லென்ஸிலும், பொக்கே, ஸ்டுடியோ மற்றும் பலவற்றிலும் படம்பிடிக்கக்கூடிய கேமராக்கள் நம்மிடம்  உள்ளன. உலக புகைப்பட தினம் என்பது தொழில்நுட்பம் எவ்வளவு தூரம் வந்துள்ளது, வளர்ந்துள்ளது என்பதை நினைவுக்கூர்ந்து அதைக் கொண்டாட ஒரு முக்கிய காரணம் ஆகும்.

Views: - 101

0

0