ஆப்பிளைக் காப்பியடிக்கிறதா சியோமி! அப்படியே ஏர்பவர் போன்ற சார்ஜர் அறிமுகமாகியிருக்கு!

30 March 2021, 11:38 am
Xiaomi launches AirPower-like 80W wireless charging pad
Quick Share

சியோமி திங்களன்று தனது 2021 வெளியீட்டு நிகழ்வில் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்தது. அந்நிகழ்வில், ஆப்பிள் ஏர்பவர் போன்ற ஒரு புதிய வயர்லெஸ் சார்ஜிங் பேடையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சியோமியின் புதிய வயர்லெஸ் சார்ஜிங் பேட் விலை CNY 599 (தோராயமாக ரூ.6,700) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சார்ஜிங் பேடில் 19 காயில்ஸ் பொருத்தப்பட்டுள்ளன, ஒரே நேரத்தில் மூன்று Qi திறன் கொண்ட சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும் என்று சியோமி தெரிவித்துள்ளது. இது ஒரு சாதனத்திற்கு 20W வரை வயர்லெஸ் சார்ஜிங்கை வழங்குவதாக கூறப்படுகிறது. இது 120W சார்ஜருடன் தொகுக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் பேடைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சாதனங்களை எங்கு வேண்டுமானாலும் வைத்து சார்ஜ் செய்யலாம்.

இது சியோமியின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் பேட் அல்ல. ஆனால் இது கடந்த 2017 ஆம் ஆண்டில் ஆப்பிள் வெளியிட்ட ஏர்பவர் சார்ஜரை போன்று உள்ளது. ஆப்பிளின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடியது. இதில் ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்போட்ஸ் ஆகியவை உள்ளன. அது குறித்து விளக்கும் போதும் வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஐபோனைச் சார்ஜ் செய்வதைப் போன்று தான் சியோமி காண்பித்தது. ஏர்பவர் வணிக ரீதியாக வெளியிடப்படவில்லை, ஆனால் அதன் அறிமுகம் குறித்து இன்னும் வதந்திகள் வெளியான வண்ணமே உள்ளன.

சியோமியின் வயர்லெஸ் சார்ஜிங் பேட் தற்போது சீனாவில் கிடைக்கிறது, மேலும் இது பிற சந்தைகளில் எப்போது வெளியாகும் என்பதில் எந்த தகவலும் இல்லை. இந்த நிகழ்வில், சியோமி Mi 11 அல்ட்ரா, இரண்டாம் நிலை திரை கொண்ட அதன் முதல் தொலைபேசி, Mi 11 லைட், Mi 11 லைட் 5 ஜி மற்றும் Mi 11i உள்ளிட்ட பல தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தியது. 

Views: - 3

0

0