இப்போது பிளிப்கார்ட்டிலும் விற்பனைக்கு கிடைக்கிறது சியோமி Mi 10 | விலை, சலுகை & EMI விவரங்கள்

26 August 2020, 5:07 pm
Xiaomi Mi 10 now also available on Flipkart for sale
Quick Share

சியோமி Mi 10 இந்த ஆண்டு தொடக்கத்தில் அமேசான் இந்தியா மற்றும் Mi.com தளங்கள் வழியாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டிலும் வாங்க கிடைக்கிறது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

சியோமி இந்தியா ட்விட்டர் தளத்தில் பிளிப்கார்ட்டில் சியோமி Mi 10 கிடைப்பதாக அறிவித்தது. 

சியோமி Mi 10 போனின் விலை 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்புக்கு ரூ.49,999 விலையுடனும், 

8 ஜிபி ரேம் உடன் 25 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பதிப்பு ரூ.54,999 விலைக்கும் விற்பனைக்கு உள்ளது. இந்த இரண்டு வகைகளும் பிளிப்கார்ட், அமேசான் இந்தியா மற்றும் Mi.com தளங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. தொலைபேசி கோரல் கிரீன் மற்றும் ட்விலைட் கிரே வண்ணங்களில் வருகிறது.

பிளிப்கார்ட்டில், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஐந்து சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக் பெறலாம், ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஐந்து சதவீதம் தள்ளுபடியைப் பெறலாம், மற்றும் வட்டி இல்லாத EMI திட்டங்கள் மாதத்திற்கு ரூ.5,278 விலையில் கிடைக்கின்றன.

சியோமி Mi 10 போன் 6.67 அங்குல முழு HD+ அமோலெட் (1080 x 2340 பிக்சல்கள்) டிஸ்பிளே வளைந்த விளிம்புகள் மற்றும் 90 Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. இது 5ஜி ஆதரவுடன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 செயலியில் இயங்குகிறது, இது 12 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. ஆன்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட Mi 10 MIUI 12 உடன் இயங்குகிறது.

7-எலிமெண்ட் லென்ஸ், 1 / 1.33-இன்ச் சென்சார், மற்றும் OIS ஆதரவு, 13 மெகாபிக்சல் அகல-கோண லென்ஸ் 123 டிகிரி பார்வை மற்றும் எஃப் / 2.4 துளை, மற்றும் எஃப் / 2.4 லென்ஸ்கள் கொண்ட 2 மெகாபிக்சல் கேமராக்கள் ஆகியவற்றுடன் 108 MP கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

30W வேக வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,780 mAh பேட்டரியை Mi 10 பேக் செய்கிறது, அத்துடன் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

Views: - 47

0

0