சியோமி Mi 10T, Mi 10T புரோ ஸ்மார்ட்போனுக்கு வெயிட் பண்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த அப்டேட்!

12 September 2020, 3:55 pm
Xiaomi Mi 10T, Mi 10T Pro Price, Storage Details Revealed
Quick Share

சியோமி நிறுவனம் சியோமி Mi 10T எனப்படும் ஒரு முதன்மை வரிசையிலான ஸ்மார்ட்போனில் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த வரிசையில் Mi 10T மற்றும் Mi 10T ப்ரோ ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, ​​ஒரு புதிய கசிவு சியோமி Mi 10T ப்ரோவின் சேமிப்பு மற்றும் வண்ண விருப்பங்கள் குறித்த விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. மறுபுறம், அமேசான் ஸ்பெயின் தயாரிப்பு பக்கம் இரு கைபேசிகளின் விலை விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

சியோமி Mi 10T புரோ விவரங்கள்

கசிந்த தகவல்களின்படி, Mi 10T Pro 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட இரண்டு சேமிப்பக கட்டமைப்புகளில் கிடைக்கும். 

8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு மாடலின் விலை 640 யூரோக்கள் (தோராயமாக ரூ.47,024) என்றும், 256 ஜிபி சேமிப்பு விருப்பம் 665 – 675 யூரோக்கள் (சுமார் ரூ.48,861- ரூ.49,500) விலையிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கைபேசி கருப்பு, சாம்பல், வெளிர் நீலம் மற்றும் வெள்ளி வண்ண விருப்பங்களில் வரும்.

வெளியான தகவல்களின் படி, புரோ மாடல் சாதனத்தின் மேல் இடது மூலையில் ஒரு துளை-பஞ்ச் கட் அவுட்டுடன் வரும். இது 144Hz புதுப்பிப்பு வீதக் காட்சியை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கைபேசியின் நேரடி படம் 5,000 mAh பேட்டரி உடன் வெளியாகும் என்பதை வெளிப்படுத்தியது, இது நான்கு பின்புற கேமரா அமைப்பை இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியது. மேலும், இது 108 MP பிரைமரி சென்சார் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சியோமி Mi 10T விவரங்கள்

தயாரிப்பு பக்க பட்டியல் சியோமி Mi 10T இன் சில முக்கிய விவரக்குறிப்புகளையும் விலையுடன் வெளிப்படுத்துகிறது. 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் போன்ற இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களும் இந்த கைபேசியில் கிடைக்கும். Mi 10T ஆரம்ப விலை 547 யூரோக்கள் (சுமார் ரூ.40,191) என்று பட்டியல் வெளிப்படுத்துகிறது. கைபேசி 64 MP பிரதான கேமராவைக் கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டு.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் இரு கைபேசிகளிலும் செயலாக்கத்தைக் கையாளும். தவிர, இரண்டு தொலைபேசிகளும் 5 ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும். தற்போதைய நிலவரப்படி, இரு கைபேசிகளின் விவரங்களையும் சியோமி பகிர்ந்து கொள்ளவில்லை. எனவே, இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமானது இல்லை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Views: - 7

0

0