சியோமி Mi 11 மற்றும் Mi 11 ப்ரோ போனுக்காக வெறித்தனமா வெயிட் பண்றீங்களா? உங்களுக்கு செம குட் நியூஸ் இருக்கு!

30 November 2020, 1:16 pm
Xiaomi Mi 11 and Mi 11 Pro tipped to be announced in January
Quick Share

சியோமி Mi 11 மற்றும் Mi 11 ப்ரோ போனுக்காக வெறித்தனமா வெயிட் பண்ற ரசிகர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு சந்தோசமான செய்து இருக்குங்க. அது என்னவென்றால், சியோமி ஜனவரி மாதம் Mi 11 தொடரை அறிமுகம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த தொடரில் Mi 11 மற்றும் Mi 11 ப்ரோ முதன்மை ஸ்மார்ட்போன்கள் அடங்கும் என்று கூறப்படுகிறது.

சியோமி Mi 10 மற்றும் Mi 10 ப்ரோ முதன்மை தொலைபேசிகள் இந்த ஆண்டு பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது சீனாவைச் சேர்ந்த ஒரு தகவல் கசிவாளர், Mi 10 தொடரின் அடுத்த பதிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

குவால்காம் தனது சமீபத்திய 5ஜி சிப்செட்களை அதன் வருடாந்திர ஸ்னாப்டிராகன் உச்சி மாநாட்டில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் அடுத்த முதன்மை ஸ்னாப்டிராகன் 875 செயலியும் அடங்கும். இந்த குவால்காம் நிகழ்வில் Mi 11 தொடருக்கான ஒரு அறிவிப்பையும் சியோமி வெளியிட வாய்ப்புள்ளது.

ஸ்னாப்டிராகன் 2020 ஆண்டிற்கான தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் சியோமி இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜுன் கலந்து கொள்வார் என்று குவால்காம் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. Mi 11 மற்றும் Mi 11 ப்ரோ வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 875 செயலியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி Mi 11 மற்றும் Mi 11 Pro இரண்டும் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் என்று ஊகிக்கப்படுகிறது. Mi 11 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா சென்சாருடன் 0.8μm பிக்சல் அளவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது. Mi 11 100W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கக்கூடும் என்ற ஊகங்கள் உள்ளன, அதேசமயம் புரோ மாடலில் 120W வேகமான சார்ஜிங் ஆதரவு இருக்கக்கூடும்.

சமீபத்திய தகவல்கசிவின் படி, Mi 11 தொடர் ஸ்மார்ட்போன்கள் வீடியோ மற்றும் பட தரத்தை மேம்படுத்தும் சில மேம்பட்ட அமைப்புகளுடன் வரும். MIUI 12 இன் இன்டெர்னல் பீட்டா ஃபார்ம்வேரின் ஸ்கிரீன் ஷாட், இந்த ஆண்டு தொடக்கத்தில் OPPO வின் Find X2 முதன்மைத் தொடரில் அறிமுகமான MEMC ஆதரவு, நிகழ்நேர SDR to HDR மற்றும் சூப்பர் ரெசல்யூஷன் ஆகியவை இந்த தொலைபேசியிலும் இருக்கும் என்பதைக் காட்டியது.

சியோமி Mi 11 Pro QHD+ தெளிவுத்திறன் மற்றும் 120 Hz புதுப்பிப்பு வீதத்துடன் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது 1080p தெளிவுத்திறன் மற்றும் 90 Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரும் Mi 10 ப்ரோவின் மேம்படுத்தலாக இருக்கும். முன்னதாக Mi 10 மற்றும் Mi 10T தொடர்களில் இடம்பெற்ற வளைந்த விளிம்புகளை இந்த தொலைபேசி தக்க வைத்துக் கொள்ளும், மேலும் திரையில் மேல்-இடது மூலையில் ஒரு பஞ்ச்-ஹோல் அமைப்பு இருக்கும்.

Views: - 24

0

0