சியோமி Mi 33W சோனிக் சார்ஜ் 2.0 இந்தியாவில் அறிமுகம் | விலை & முக்கிய விவரங்கள்
21 November 2020, 4:15 pmஇந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தைப் பிரிவில் முன்னோடிகளில் சியோமி பிராண்டும் ஒன்றென்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. இது தவிர, நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் உபகரணங்களையும் நாட்டில் ஏராளமான சலுகைகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள உபகரணம் Mi 33W சோனிக் சார்ஜ் 2.0 ஃபாஸ்ட் சார்ஜர் ஆகும்.
நிறுவனத்தின் புதிய ஃபாஸ்ட் சார்ஜர் ஏற்கனவே இருக்கும் 27W சோனிக் சார்ஜரின் மேம்படுத்தப்பட்ட புதிய பாதிப்பாகும், இது கடந்த ஆண்டு ரெட்மி K20 தொடருடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம் அறிமுகப்படுத்திய சமீபத்திய ஃபாஸ்ட் சார்ஜர் குவால்காம் குயிக் சார்ஜ் 3.0 உடன் இணக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Mi 33W சோனிக் சார்ஜ் 2.0 இந்தியாவில் அறிமுகம்
அதன் பெயர் குறிப்பிடுவது போல, Mi 33W சோனிக் சார்ஜ் 2.0 33W வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும். இது வேகமான சார்ஜிங் அடாப்டர் மற்றும் 100 செ.மீ நீளமுள்ள யூ.எஸ்.பி டைப்-A முதல் டைப்-C சார்ஜிங் கேபிள் உடன் அனுப்பப்படுகிறது. அடாப்டர் சேர்க்கப்பட்டுள்ளதால், சியோமியிலிருந்து இந்த புதிய வேகமான சார்ஜர் 33W வரை சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். மேலும், சார்ஜிங்கிற்கு செருகப்பட்ட சாதனத்தைப் பொறுத்து வழக்கமான மின் வெளியீட்டிற்கான திறன் இருக்கும்.
Mi 33W சோனிக் சார்ஜ் 2.0 ஃபாஸ்ட் சார்ஜர் 100V முதல் 240V வரை உலகளாவிய மின்னழுத்த வரம்பை ஆதரிக்கிறது. அதன் 33W சோனிக் சார்ஜ் 2.0 சார்ஜரில் 380V வரை அதிக பாதுகாப்பு இருப்பதாக நிறுவனம் கூறுகிறது.
விலை மற்றும் கிடைக்கும் தன்மை
Mi 33W சோனிக் சார்ஜ் 2.0 மேட் இன் இந்தியா தயாரிப்பு மற்றும் இது BIS ஆல் சான்றளிக்கப்பட்டது. இது புதிய ஃபாஸ்ட் சார்ஜர் விலை ரூ.999 மற்றும் Mi.com, Mi Home மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற சில்லறை விற்பனையாளர் கடைகள் வழியாக விற்பனைக்கு வரும். சியோமியின் முந்தைய சலுகையான 27W சோனிக் சார்ஜ் அடாப்டரின் விலை ரூ.549 ஆகும். நிறுவனம் இந்தியாவில் Mi 30 W வயர்லெஸ் சார்ஜிங் பேடை ரூ.2,299 விலையில் விற்பனை செய்கிறது.
0
0