Mi Notebook 14 IC | வெப் கேமரா உடன் சியோமி Mi நோட்புக் 14 IC வெளியீடு! விலை எவ்ளோ தெரியுமா?
20 January 2021, 10:25 amகடந்த 2019 ஆம் ஆண்டில் சியோமி நிறுவனம் இந்தியாவில் மடிக்கணினி வணிகத்தில் போட்டி விலையில் Mi நோட்புக் 14 லேப்டாப்பை அறிமுகம் செய்வதன் மூலம் இணைந்தது. நல்ல விலையில் சியோமி பல சிறந்த அம்சங்களை வழங்கிய போதிலும், மடிக்கணினியில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. Mi நோட்புக் 14 இல் ஒரு வெப் கேமரா இல்லாமல் இருந்தது. இதை ஈடுசெய்ய நிறுவனம் இலவச யூ.எஸ்.பி வெப் கேமராவை வழங்கியது.
சியோமி Mi நோட்புக் 14 IC என்ற புதிய மாறுபாட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிறுவனம் இறுதியாக அந்த சிக்கலை சரிசெய்ததுள்ளது, இது இப்போது ஒருங்கிணைந்த வெப் கேமராவுடன் வருகிறது.
சியோமி Mi நோட்புக் 14 IC விவரக்குறிப்புகள்
சியோமி Mi நோட்புக் 14 IC 10 வது தலைமுறை இன்டெல் கோர் i5-10210U குவாட் கோர் செயலி உடன் இன்டெல் UHD கிராபிக்ஸ் உடன் அடிப்படை மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது. 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய உயர்நிலை பதிப்பும் உள்ளது, இது அடிப்படை மாறுபாட்டை விட சற்று அதிகம் விலையிலானது.
மடிக்கணினி 14 அங்குல டிஸ்ப்ளே FHD (1920 x 1080p) தெளிவுத்திறனுடன் ஒரு வெப் கேமராவுடன் உள்ளது. பெரும்பாலான மடிக்கணினிகளைப் போலவே, இது 720p HD வெப் கேமரா ஆகும், மேலும் இது வீடியோ மீட்டிங்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கும் போதுமானதாக இருக்கும்.
I / O பொறுத்தவரை, மடிக்கணினியில் இரண்டு யூ.எஸ்.பி-A 3.1 ஜென் 1 போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி-A 2.0 போர்ட், முழு அளவிலான HDMI போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் சார்ஜிங் பின் உள்ளது. மடிக்கணினியில் 1.3 மிமீ கீகளுடன் கத்தரிக்கோல் பொறிமுறை கீபோர்டு உள்ளது. Mi நோட்புக் 14 ஐப் போலவே, Mi நோட்புக் 14 IC யும் கீபோர்டு பேக்லைட் கொண்டிருக்காது. Mi நோட்புக் 14 IC யூ.எஸ்.பி டைப்-C போர்ட்டைத் கொண்டிருக்காது என்பதையும் நினைவில் கொள்க.
இணைப்பைப் பொறுத்தவரை, மடிக்கணினி டூயல்-பேன்ட் வைஃபை (2.4GHz மற்றும் 5GHz) மற்றும் புளூடூத் 5.0 ஐ ஆதரிக்கிறது. தவிர, சாதனம் இரட்டை 2W ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. 3660 mAh அல்லது 46Wh பேட்டரி மடிக்கணினியை இயக்குகிறது, இது 10 மணிநேர பேட்டரி ஆயுள் வழங்கும் திறன் கொண்டது.
சியோமி Mi நோட்புக் 14 IC – விலை விவரம்
சியோமி Mi நோட்புக் 14 IC மூன்று வகைகளில் வருகிறது.
- 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் இன்டெல் UHD கிராபிக்ஸ் கார்டு கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ. 43,999,
- 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இன்டெல் UHD கிராபிக்ஸ் கொண்ட மாடலின் விலை ரூ.46,999 ஆகும்.
- கடைசியாக, Mi நோட்புக் 14 IC யின் மிக சக்திவாய்ந்த பதிப்பு 8 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் NVIDIA MX 250 2 ஜிபி GPU போன்றவற்றுடன் ரூ.49,999 விலையிலானது.
இந்த மூன்று மாடல்களும் தற்போது சியோமி இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.
0
0