சியோமியின் 30000 mAh பேட்டரி பவர் பேங்க்! இனிமே சார்ஜ் இல்லையேன்னு கவலையே வேண்டாம்

31 March 2021, 1:24 pm
Xiaomi Mi Power Bank Boost Pro with 30000mAh battery launched in India
Quick Share

சியோமி இந்தியாவில் 30000 mAh பேட்டரியுடன் Mi பவர் பேங்க் பூஸ்ட் புரோ சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கிரௌட் ஃபண்டிங்கின் ஒரு பகுதியாக, நிறுவனம் 30000 mAh Mi பவர் பேங்கை ரூ.1,999 எனும் தள்ளுபடி விலையில் வழங்குகிறது.

Mi பவர் பேங்க் பூஸ்ட் புரோ இப்போது 15 நாட்களில் 5,000 யூனிட்டுகளை விற்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் கிரௌட்ஃபண்டிங் மூலம் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. சியோமி மே 15 முதல் தயாரிப்புகளை வெளியிட தொடங்கும். இது ஒரே ஒரு கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கும்.

பெயர் குறிப்பிடுவதுபோல், இந்தியாவில் புதிதாக தொடங்கப்பட்ட சியோமி பவர் பேங்க் 30,000 mAh திறன் கொண்டதாக இருக்கும். மேலும், புதிய பவர் பேங்க் அதன் யூ.எஸ்.பி டைப்-C போர்ட் வழியாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங் செய்ய்வதற்கான ஆதரவைக் கொண்டிருக்கும். அதன் 30W வேக சார்ஜரைப் பயன்படுத்தி, Mi பவர் பேங்க் பூஸ்ட் புரோவை 7.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

இது மொத்தம் நான்கு போர்ட்களுடன் வருகிறது. ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்ய ஒரு மைக்ரோ யூ.எஸ்.பி மற்றும் ஒரு யூ.எஸ்.பி டைப்-C போர்ட்டுடன் இரண்டு யூ.எஸ்.பி டைப்-A போர்ட்களைக் கொண்டுள்ளது. இதிலிருக்கும் யூ.எஸ்.பி டைப்-C போர்ட் மூலமும் 24W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் பவர் பேங்கை சார்ஜ் செய்ய முடியும்.

அதிக மின்னோட்டம், அதிக பவர், ஷார்ட் சர்கியூட், அறிவார்ந்த வெப்பநிலை கட்டுப்பாடு போன்ற பலவற்றிலிருந்து 16 அடுக்கு பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இது பவர் டெலிவரி (PD) 3.0 ஐயும் கொண்டுள்ளது, எனவே, இது கிட்டத்தட்ட எல்லா சாதனங்களுடனும் இணக்கமானது.

கடைசியாக, Mi பவர் பேங்க் பூஸ்ட் புரோ 30000 எம்ஏஎச் 154.5 x 72.3 x 38.9 மிமீ பரிமாணங்களை அளவிடுகிறது மற்றும் 640 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

Views: - 2

0

0