ரூ.10,999 விலையில் சியோமி Mi வாட்ச் ரிவாலவ் அறிமுகம் | அம்சங்கள் & விவரக்குறிப்புகளை இங்கே அறிக

29 September 2020, 1:44 pm
Xiaomi's first smartwatch, the Mi Watch Revolve has been announced
Quick Share

சியோமி தனது முதல் ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிவித்துள்ளது – அதுதான் Mi வாட்ச் ரிவால்வ் (Mi Watch Revolve) ஆகும். ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட சியோமியின் ஸ்மார்ட் லிவிங் 2021 நிகழ்வில் புதிய ஸ்மார்ட்வாட்ச் இன்று வெளியிடப்பட்டது.

Mi வாட்ச் ரிவால்வ் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது சிறிய தொடுதிரை ஆதரவுடன் வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் மிட்நைட் பிளாக் மற்றும் குரோம் சில்வர் என இரண்டு வண்ணங்களில் வருகிறது. ஒரு லெதர் வாட்சையும் சேர்த்து நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய ஐந்து பேண்ட் விருப்பங்கள் உள்ளன.

Mi வாட்ச் ரிவால்வ் ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேசிங் மற்றும் பெரிய 46 மிமீ டயலுடன் வருகிறது. டயலில் 450 நைட்ஸ் அளவு உள்ளது, அவை சில ஸ்மார்ட்போன்களைப் போலவே உள்ளன. Mi வாட்ச் ரிவால்வ் தன்னியக்க பிரகாசம் சரிசெய்தல் ஆதரவு மற்றும் எப்போதும் இயங்கும் ஸ்மார்ட் டிஸ்பிளே மற்றும் பாதுகாப்புக்காக கொரில்லா கிளாஸ் 3 உடன் வருகிறது.

ஃபிட்னெஸ் பிரிவில், Mi வாட்ச் ரிவால்வ் ஃபர்ஸ்ட் பீட் அல்காரிதத்துடன் (Firstbeat algorithm) வருகிறது, இது இதய துடிப்பு கண்காணிப்பு, இதய துடிப்பு மாறுபாடு கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு, மன அழுத்த நிலை, ஆற்றல் நிலை, தூக்க தரம் மற்றும் VO2 மேக்ஸ் கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய மேம்பட்ட உடற்பயிற்சி கண்காணிப்புக்கு உதவுகிறது. 10 சிறப்பு விளையாட்டு முறைகளும் உள்ளன.

Mi வாட்ச் ரிவால்விற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் சியோமி வேர் ஆப் மூலம் கட்டுப்படுத்தலாம். 

ஸ்மார்ட்வாட்ச் ஜி.பி.எஸ் மற்றும் க்ளோனாஸ் ஆதரவுடன் வருகிறது, எனவே நீங்கள் பயிற்சிக்கு செல்லும்போது  உங்கள் கைக்கடிகாரத்தை வீட்டிலேயே விட்டுவிட்டு செல்லலாம். நீச்சல் பயிற்சிக்கு செல்லும்போதும் இந்த கடிகாரத்தை நீங்கள் எடுத்துச் செல்லலாம்.

நிச்சயமாக, Mi வாட்ச் ரிவால்வ் அழைப்பு மற்றும் செய்தி அறிவிப்புகள் போன்ற ஸ்மார்ட்வாட்சின் மற்ற அனைத்து செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.

Mi வாட்ச் அதன் 420 mAh பேட்டரியுடன் லேசான பயன்பாட்டின் போது இரண்டு வாரங்கள் வரை நீடிக்கக்கூடியது.

ரூ.10,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட Mi வாட்ச் ரிவால்வ் இப்போது முதல் தீபாவளிக்குள் வாங்கினால் ரூ.9,999 விலையில் வாங்கலாம்.

முதல் விற்பனை அக்டோபர் 6 மதியம் 12:00 மணிக்கு Mi.com, Amazon.in மற்றும் Mi Home Stores ஆகியவற்றில் நடக்கும்.

Views: - 10

0

0