யமஹா R15 அடிப்படையிலான புதிய ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் வெளியானது

4 November 2020, 7:51 pm
Yamaha R15-based new Aerox 155 scooter unveiled
Quick Share

யமஹா புதிய 2020 ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை இந்தோனேசிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. படங்களில் இருப்பதைப் போலவே ஸ்கூட்டர் ஸ்போர்ட்டி தன்மையுடன், அதன் இன்ஜின் இந்தியாவில் விற்கப்படும் YZF R15 V3 மோட்டார் சைக்கிளிலிருந்து முழுக்க முழுக்க கடன் வாங்கப்படுவதால் செயல்திறனைப் பொறுத்தவரை அது சமமாக சக்திவாய்ந்ததாகவே இருக்கும்.

Yamaha R15-based new Aerox 155 scooter unveiled

ஏராக்ஸின் ஸ்போர்ட்டி வடிவமைப்பு ப்ளூடூத் இணைப்புடன் ப்ளூ-பேக்லிட் LCD டிஸ்ப்ளே போன்ற நவீன அம்சங்களுடன் பூர்த்தி அடைகிறது. ரிமோட் லாக்கிங் சிஸ்டம், கீலெஸ் பற்றவைப்பு, ஹஸார்டு லைட் சுவிட்ச் மற்றும் என்ஜின் கில் சுவிட்ச் ஆகியவற்றுடன் 25 லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. மேலும், யமஹா எரிபொருள் தொட்டி திறனை இப்போது 4.6 லிட்டரிலிருந்து 5.5 லிட்டராக உயர்த்தியுள்ளது.

Yamaha R15-based new Aerox 155 scooter unveiled

ஏரோக்ஸின் வடிவமைப்பு கூர்மையான மற்றும் ஏரோடைனமிக் தன்மைக் கொண்டது, அது நிற்கும்போதும் கூட இயக்கத்தில் இருப்பது போல தெரிகிறது. அகலமான மற்றும் செதுக்கப்பட்ட கவசத்தில் DRL-களுடன் நேர்த்தியான தோற்றமுடைய டூயல்-பாட் எல்.ஈ.டி ஹெட்லேம்ப் அமைப்பு உள்ளது. இது ரே ZR 125 இல் இருப்பதைப் போன்று ஹேண்டில்பார் கௌலில் ஒரு சிறிய வைசரைப் பெறுகிறது. X வடிவ, நீண்ட மற்றும் கோண இருக்கை பேனலின் கீழ் LED வால் விளக்குடன் வடிவமைப்பு முடிகிறது.

Yamaha R15-based new Aerox 155 scooter unveiled

இன்ஜினைப் பொறுத்தவரையில், ஏரோக்ஸை இயக்குவது 155 சிசி, ஒற்றை-சிலிண்டர் ஆகும், இது R15 ஐப் போலவே வேரியபிள் வால்வு ஆக்சுவேஷன் (VVA) உடன் இயங்கும். இருப்பினும், ஸ்கூட்டரின் இன்ஜின் 8,000 rpm இல் மணிக்கு 15.15 bhp ஆற்றலையும், 6,500 rpm இல் மணிக்கு 13.9 Nm ஆற்றலையும் உற்பத்தி செய்யும். முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது இது சற்று குறைவான திருப்புவிசையையும் ஆனால் அதிக சக்தியையும் உருவாக்குகிறது

Yamaha R15-based new Aerox 155 scooter unveiled

இந்தோனேசியாவில், யமஹா 2020 ஏராக்ஸ் 155 ஸ்கூட்டருக்கு IDR 25.5 மில்லியன் (தோராயமாக ரூ.1.29 லட்சம்) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இதை இப்போதைக்கு இந்தியாவிற்கு கொண்டு வர வாய்ப்பில்லை. இதேபோன்ற இடப்பெயர்ச்சி கொண்ட ஒரே ஸ்போட்ர்ஸ் ஸ்கூட்டர் ஏப்ரிலியா SR 160 மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 46

0

0