You Broadband | 200 Mbps வரை வேகத்துடன் கூடிய யூ பிராட்பேண்ட் திட்டங்கள் அறிமுகம்

23 January 2021, 9:41 am
You Broadband Launches New Bundled Plans For Its Customers
Quick Share

வோடபோன்-ஐடியாவுக்குச் சொந்தமான யூ பிராட்பேண்ட் , இந்தியாவில் ஒரு போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் புதிய இணைய சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் ஜியோ ஃபைபர் திட்டங்களுக்கு கடுமையான போட்டியை வழங்க யூ பிராட்பேண்ட் தயாராக உள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இருப்பினும், ஒரு சிக்கல் உள்ளது. யூ பிராட்பேண்ட் திட்டம் இப்போதைக்கு சூரத் நகரில் மட்டுமே கிடைக்கிறது.

இந்த புதிய திட்டங்களுடன், யூ பிராட்பேண்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பையும் வயர்டு இணைப்புடன் போஸ்ட்பெய்ட் இணைப்பையும் வழங்குகிறது. தவிர, நிறுவனம் தனது தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் 22 நகரங்களிலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தவிர, புனே மற்றும் ஹைதராபாத் நகரங்களில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய யூ பிராட்பேண்ட் திட்டங்களின் விவரங்கள்

காம்போ திட்டங்கள் 10 Mbps, 100 Mbps மற்றும் 200 Mbps வேகத்தை வழங்குகின்றன. திட்டங்கள் ரூ.1,500 முதல் ரூ.7,200 மதிப்பிலானவையாக உள்ளன. 

100 Mbps திட்டம் ரூ.1,500 மற்றும் ரூ.3,000 விலைகளில் 90 நாட்கள் மற்றும் 180 நாட்கள் வேலிடிட்டி உடன் 15 நாட்கள் கூடுதல் சேவையுடன் கிடைக்கும். மேலும், யூ பிராட்பேண்ட் வழங்கும் 360 பிளஸ் 30 நாட்கள் கூடுதல் சேவையுடனான திட்டம் ரூ.6,000 விலையில் கிடைக்கும். 200 Mbps திட்டம் ரூ.1,800 விலையில் 90 நாட்கள் வேலிடிட்டி உடனும் மற்றும் 360 நாட்கள் வேலிடிட்டி உடன் ரூ.7,200 விலையிலும் கிடைக்கும். இதேபோல், ஆறு மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் திட்டம் 15 மற்றும் 30 நாட்கள் இலவச சேவைகளை வழங்குகின்றன.

Views: - 9

0

0