ஜியோ பயனர்கள் வாட்ஸ்அப் மூலமே COVID-19 தடுப்பூசி இருப்பை அறிந்துக்கொள்ள புதுவசதி!

11 June 2021, 12:17 pm
You can now check for COVID-19 vaccine slots on WhatsApp
Quick Share

நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளராகவும் இருந்து, வாட்ஸ்அப் பயன்படுத்துபவராகவும் இருந்தால் உங்களுக்காக ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான பாதுகாப்பான செய்தி தளமான வாட்ஸ்அப் மூலம் ஜியோ நிறுவனம் தனது  பயனர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்க முடிவுச் செய்துள்ளது. COVID-19 தடுப்பூசி கிடைப்பது குறித்த விவரங்கள் தொடங்கி மொபைல் ரீசார்ஜ் வரை பல வசதிகளை ஜியோ பயனர்கள் வாட்ஸ்அப் மூலமே பெறலாம்.

ஜியோ மற்றும் வாட்ஸ்அப் ஒரு புதிய மொபைல் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளன. அதன் மூலம் ரீசார்ஜ் செய்தல், பணம் செலுத்துதல், கேள்விகளுக்கு விடை பெறுதல் மற்றும் புகார்களை எழுப்புதல் போன்ற சேவைகளைப் பயனர்கள் பெற முடியும். இதற்கென 7000770007 என்ற பிரத்தியேக வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளைப் பெற, உங்கள் ஸ்மார்ட்போனில் மொபைல் எண்ணைச் சேமிக்க வேண்டும், பின்னர் வாட்ஸ்அப்பைத் திறந்து, குறிப்பிட்ட எண்ணைத் தேடி, Hi என மெசேஜ் அனுப்ப வேண்டும்.

கோவிட் தடுப்பூசி கிடைக்கும் விவரங்கள் உள்ளிட்ட சேவைகளை சாட்போட் உங்களுக்கு வழங்கும். உங்களுக்கு தேவையான சேவைகளைப் பெறுவதற்கான விருப்பங்கள் அதில் தோன்றும். வாட்ஸ்அப் சாட்பாட் மூலமே உங்கள் தேவைகளைப் பூர்த்திச் செய்து கொள்ளலாம்.

PTI வெளியிட்ட அறிக்கையின்படி, கோவிட் தடுப்பூசிக்கான மற்ற அனைத்து ஆன்லைன் போர்ட்டல்களைப் போலல்லாமல், இதில், நீங்கள் அரட்டையில் உங்கள் ‘Pincode’ எண்ணை மட்டும் உள்ளிடுவதன் மூலம் தடுப்பூசி மைய விவரங்களை அதில் பெற முடியும். 

Views: - 158

0

0

Leave a Reply