காரில் இதை மட்டும் தப்பித்தவறிக்கூட செய்யாதீர்கள்! அப்புறம் சேதாரம் உங்களுக்கு தான்

10 July 2021, 1:07 pm
You Should Never Put Your Feet on the Dashboard
Quick Share

காரில் செல்லும்போது ​​ஓட்டுநர் சாலையைப் பார்த்து வண்டியை ஒட்டிக்கொண்டு இருக்கும்போது, பக்கத்து இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் பலர் ஒய்யாரமாக கால்களைத் தூக்கி காரின் டேஷ்போர்டின் மேல் வைத்துக்கொண்டு போவதை நாம் பார்த்திருக்கலாம். உங்கள் கால்களை டாஷ்போர்டில் வைக்க மிகவும் சௌகரியமாக இருக்கலாம். ஆனால் அப்படி வைத்து மிக மிக தவறு என்பதும் இதனால் உங்கள் கால் உடையவும் கூட வாய்ப்புண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? 

நாம் பயணிக்கும் கார் விபத்துக்கு உள்ளாகும் போது நம் உயருக்கு பாதுகாப்பு கொடுக்கவே கார்களில் இந்த ஏர்பேக்குகள் பொருத்தப்படுகின்றன. ஆனால் நாம் விவரம் இல்லாமல் ஏர்பேக் உள்ளிருக்கும் டேஷ்போர்டு மீது அதிக அழுத்தம் கொடுத்தால், மிக அதிக வேகத்தில் ஏர்பேக் வெளியில் வரும். இதனால் நாம் கால்களை டேஷ்போர்டு மீது வைத்து இருந்தால் கால்கள் உடையவும் கூட வாய்ப்புண்டு. எனவே பெரியவர்களாக இருந்தாலும் சரி குழந்தைகளாக இருந்தாலும் சரி, டேஷ்போர்டு மீது அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் இருந்தால் அவர்களை நகரச் சொல்லி பாதுகாப்புடன் இருக்க செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் டிரைவர் மற்றும் முன்னிருக்கை பயணிகள் இருவருக்குமே ஏர்பேக் கட்டாயம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே முன் பக்க டேஷ்போர்டின் மீது அதிக அழுத்தத்தைக் கொடுக்கவே கூடாது.

Views: - 216

0

0