யூடியூபில் படைப்பாளர்கள் பணம் சம்பாதிக்க இன்னுமொரு புதிய வழி | Youtube “Super Thanks” பற்றி தெரியுமா?

21 July 2021, 1:13 pm
YouTube launches ‘Super Thanks,’ a new money-making feature
Quick Share

தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல மூலைகளில் இருப்பவர்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் நம்மால் அறிய முடிகிறது என்றால் அதற்கான முக்கிய காரணம் தான் YouTube என்று சொன்னாலும் மிகையில்லை. ஏனென்றால் அவ்வளவு பேர் தங்கள் வாழக்கை முறையை யூடியூபில் பகிர்ந்து அதன் மூலம் வருவாயையும் ஈட்டிவருகின்றனர். 

இப்போது கிரியேட்டர்கள் பணம் சம்பாதிக்க மேலும் உதவியாக இருக்கும் வகையில் “Super Thanks” என்ற புதிய அம்சத்தை யூடியூப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், யூடியூப் வீடியோக்களைப் பார்க்கும் பயனர்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்கவும், தங்களுக்கு பிடித்த படைப்பாளர்களுக்கு ஆதரவைக் காட்டவும் “Super Thanks” ஐ வாங்கலாம்.

ரசிகர்கள் இந்த சூப்பர் தேங்க்ஸை $ 2 (தோராயமாக ரூ.150) முதல் $50 வரை (சுமார் ரூ.3,730) பணம் செலுத்தி பெற முடியும். ஒரு வீடியோ பக்கத்தில் ஒரு ரசிகர் சூப்பர் தேங்க்ஸை வாங்கியவுடன், YouTube வாங்கியதை முன்னிலைப்படுத்தும் வகையால் வண்ணமயமான கமெண்ட் உடன் அனிமேஷன் செய்யப்பட்ட GIF ஐ சேர்க்கும், இதற்கு படைப்பாளிகள் பதிலளிக்க முடியும்.

இந்த அம்சம் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களில் (ஆண்ட்ராய்டு மற்றும் iOS) 68 நாடுகளில் உள்ள படைப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கிடைக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இதை மேலும் அதிக படைப்பாளர்களுக்கு விரிவுபடுத்துவதில் பணியாற்றி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூடியூபர்கள் தங்களுக்கு சூப்பர் தேங்க்ஸ் அம்சம் கிடைத்ததா என்பதை பார்க்க:

படி 1: YouTube Studio வில் Login செய்ய வேண்டும். இடது மெனுவில் உள்ள Monetization என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

படி 2: Supers என்ற புதிய தாவலைத் தேர்ந்தெடுக்கவும். சூப்பர்ஸ் பிரிவில் இது உங்கள் முதல் முறையாக இருந்தால், திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தல் செயல்முறையைத் தொடங்க வேண்டும். சூப்பர்ஸை அணுக உங்கள் யூடியூப் Monetize ஆகியிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் சூப்பர்ஸ் பகுதியைக் காணவில்லை என்றால், உங்களுக்கு இன்னும் அணுகல் கிடைக்கவில்லை என்பதை அறிந்துக்கொள்ளலாம். எல்லா வழிமுறைகளையும் நீங்கள் முடித்ததும், “சூப்பர் தேங்க்ஸ்” விருப்பத்தை ஆன்/ஆஃப் செய்ய உங்களுக்கு விருப்பங்கள் கிடைக்கும். 

Views: - 79

0

0

Leave a Reply